| சின்ன வெங்காய விதை இலவசம் Dinamalar
சின்ன வெங்காய விதை இலவசம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
07:06

கம்பம்:தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் சின்ன வெங்காயம் சாகுபடிசெய்யும் விவசாயிகளைஊக்குவிக்க தோட்டக்கலை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அதற்கான விதைகள் எக்டேருக்கு 4 கிலோ,தேவையான உரங்கள், பூச்சி மருந்துகள் முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படுவோர் கம்பம் மற்றும் உத்தமபாளையம் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், இத்திட்டத்தில் கம்பம் வட்டாரத்திற்கு 4 எக்டேருக்கும், உத்தமபாளையம் வட்டாரத்திற்கு 5 எக்டேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும்,'என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X