அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்: இல.கணேசன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
07:08

பரமக்குடி:அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று இல.கணேசன் உறுதியளித்தார்.

பரமக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி., கூறியதாவது:

பா.ஜ., வாஜ்பாய் தலைமையில் மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.,14 தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும், என பா.ஜ., விரும்புகிறது. நீதிமன்ற தீர்ப்பும் விரைவில் வரவுள்ளது.

தீர்ப்பு வந்தவுடன் அங்கு கோயில் கட்டப்படும். ஏற்கனவே அங்கு ராமர் கோயில் தான் உள்ளது. இஸ்லாமிய மக்கள் உண்மையை புரிந்து இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். உ.பி., அரசைப் போல் மத்திய அரசு அவசர

சட்டம் இயற்றியாவது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும், என்றார்.

தேசிய குண்டு எறிதல் போட்டி

பரமக்குடி மாணவிக்கு தங்கம்

பரமக்குடி: பரமக்குடி கீழ முஸ்லிம் மேல் நிலைப் பள்ளி மாணவி சர்மிளா, டிச., 1 முதல் 3 வரை ஆந்திர மாநிலம் திருப்பதி தாரகராமா ஸ்டேடியத்தில் நடந்த 16 வது தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் பங்கேற்றார். இதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கனோர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி கீழ முஸ்லிம் பள்ளி பிளஸ் 1 மாணவி சர்மிளா 16 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு 13.75 மீ., குண்டு எறிந்து

முதலிடம் பெற்று

தங்கப்பதக்கம்,

கேடயம் பெற்றார்.

மேலும் கடந்த ஆண்டு ஹரியானா மாணவி அஞ்சலியின் 12.73 மீ., சாதனையை சர்மிளா முறியடித்து புதிய சாதனை படைத்தார். தேசிய போட்டியில் தங்கம் வென்ற மாணவியை பள்ளி தாளார்

சாதிக்அலி, தலைமை ஆசிரியர் அஜ்மல்கான், பயிற்சியாளர் சரவண சுதர்சன், உடற்கல்வி

ஆசிரியர்கள் சிவகுரு, இந்திரஜித், அன்வர்ராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள்

பாராட்டினர்.

--கிராம உதவியாளர் சங்க

நிர்வாகிகள் கூட்டம்

கீழக்கரை:கீழக்கரையில் கிராம உதவியாளர்கள்

(தலையாரி) சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. வட்ட தலைவர் உத்தம சேகரன் தலைமை

வகித்தார். வட்டச்செயலாளர் சரவணக்

குமார், பொருளாளர் பாக்கியவதி முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர் கே.பாலகிருஷ்ணன்,

செயலாளர் சாமிநாதன், மாவட்ட பொருளாளர் திருப்பதி உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு தொடர்ந்து கிராம உதவியாளர்களை வஞ்சிக்கும் நோக்கோடு செயல்படுவதால், வருங்காலத்தில் ராமநாதபுரம்

கலெக்டர் அலுவலகத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X