| காமுகன்களுக்கு ஆஜராக வக்கீல்கள் மறுப்பு Dinamalar
காமுகன்களுக்கு ஆஜராக வக்கீல்கள் மறுப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
07:22

தஞ்சாவூர்: வடமாநில இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான குற்றவாளிக்கு ஆதரவாக, நீதிமன்றத்தில் வக்கீல்கள் யாரும் ஆஜராகி வழக்கு நடத்துவதில்லை என, முடிவு செய்துள்ளனர்.


ராஜஸ்தானில் இருந்து, கும்பகோணத்திற்கு வங்கிப் பணிக்கு வந்த, 25 வயது இளம்பெண்ணை, 1ம் தேதி இரவு, கும்பகோணத்தில், நான்கு இளைஞர்களை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர். நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், கும்பகோணம் வக்கீல்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:வடமாநில பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு, உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அந்த இளைஞர்களுக்கு ஆதரவாக, வக்கீல்கள் யாரும் ஆஜராக கூடாது. இதை வலியுறுத்தி, ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யலாம். தமிழகத்தில் உள்ள வக்கீல்கள் யாரும், இந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக கூடாது என, அனைத்து வக்கீல் சங்கங்களையும் கேட்டுக்கொள்ளப்படும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றினர். தீர்மானத்தின்படி, நேற்று நீதிமன்ற பணிகளை, வக்கீல்கள் புறக்கணித்தனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X