| தடுப்பணையில் கழிவுநீரை வெளியேற்ற ஓட்டை போட்ட ஊராட்சி ஊழியர்கள் Dinamalar
தடுப்பணையில் கழிவுநீரை வெளியேற்ற ஓட்டை போட்ட ஊராட்சி ஊழியர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
08:14

பனமரத்துப்பட்டி: கழிவுநீரை வெளியேற்ற, ஊராட்சி ஊழியர்கள், தடுப்பணையில் ஓட்டை போட்டனர். இதனால், மழைநீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


சேலம், ஜருகுமலை தொடரில் பெய்யும் மழைநீர், நிலவாரப்பட்டி, தாசநாயக்கன்பட்டி வழியாக, பாய்ந்தோடுகிறது. கடந்தாண்டில், தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில், மழைநீரை சேகரிக்க, ஜருகுமலை ஓடையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 19 லட்சம் ரூபாய் மதிப்பில், தடுப்பணை கட்டப்பட்டது. அதில், மழைநீருக்கு பதில், கழிவுநீர் தேங்கி, பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. துர்நாற்றம், கொசுக்கடியால், மக்கள் அவதிப்பட்டனர். இதனால், மர்மக் காய்ச்சல் பரவியதால், மக்கள் அச்சமடைந்தனர். நேற்று முன்தினம், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுப்படி, ஊராட்சி ஊழியர்கள், தடுப்பணையை உடைத்து, கழிவுநீரை வெளியேற்றினர். ஆனால், முழுமையாக கழிவுநீர் வெளியேறவில்லை. மேலும், மழைநீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் விடுவதை தடுத்து, தடுப்பணையை தூர்வாரி சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X