அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
08:16

'எஸ்' சாலை வளைவு; விபத்துக்கு அச்சாரம்: பனமரத்துப்பட்டி, பள்ளித்தெருப்பட்டியிலிருந்து, பாறையூர் வழியாக, மல்லூர் செல்லும் தார்ச்சாலை, ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டிலுள்ளது. அதில், பெரியேரி, புளியந்தோப்பு அருகே, 'எஸ்' போல் வளைந்து சாலை செல்கிறது. அங்கு, வேகமாக திரும்பும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்கள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின்றன. வளைவு குறித்து, எச்சரிக்கை பலகை ஏதும் இல்லை. மேலும், விபத்தை தவிர்க்க, வேகத்தடை அமைக்க வேண்டும்.


பயன்பாடற்ற சுகாதார வளாகம்: ஓமலூர், எம்.செட்டிப்பட்டி ஊராட்சி, பெருமாள் கோவில் மாட்டுசந்தையில், 2011 - 12ல், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. மகளிர் சுய உதவி குழு மூலம் பராமரிக்கப்பட்ட கழிப்பிடத்தில், தண்ணீர் வசதி இல்லாததோடு, விளக்கு எரியவில்லை. இதனால், பெண்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளியில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கழிப்பிடத்தை சீரமைக்கக் கோரி, அதிகாரிகளிடம் புகாரளித்தும் பிரயோஜனமில்லை.


தெருவில் கழிவுநீர்; தொற்றுநோய் பீதி: தம்மம்பட்டி, நான்காவது வார்டு, கோனேரிப்பட்டியில், போதிய சாக்கடை வசதி இல்லை. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதோடு, கொசுத்தொல்லை அதிகரித்து, மக்களை கடித்து துன்புறுத்துகின்றன. கழிவுநீர் சங்கமிக்கும் பாதையை கடந்து, மாணவர்கள், மக்கள் பிரதான சாலைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.


கொசு உற்பத்திக்கு 'வழி'வகுப்பு: தலைவாசல், மும்முடி - வீரகனூர் சர்வீஸ் சாலையில், பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. அதில், தற்போது புள்ளியியல் துறை அலுவலகம் செயல்படுகிறது. அதன் முன், பழைய சைக்கிள், தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. அதனால், பழைய பொருட்கள் தேக்கிவைக்கும் கிடங்கு போல், அலுவலகம் உள்ளது. மேலும், அவற்றில் மழைநீர் தேங்கி, கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளதால், உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.


புதரில் கழிப்பிடம் செல்லும் அவலம்: சங்ககிரி, மோரூர் கிழக்கு, புள்ளிபாளையத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, பெரும்பாலான வீடுகளில், தனிநபர் கழிப்பறை வசதி இல்லை. அருகில், பொதுக்கழிப்பிடமும் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையம், சேவை மைய கட்டடம் அருகே உள்ள புதரை, திறந்தவெளி கழிப்பிடமாக, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் நிலை உள்ளது.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X