| கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல்: தடையை மீறி சந்தை நடந்ததால் பாதிப்பு Dinamalar
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல்: தடையை மீறி சந்தை நடந்ததால் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
08:16

ஓமலூர்: தடையை மீறி சந்தை நடந்ததால், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.


சேலம் மாவட்டம், ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி அருகே, பெருமாள் கோவில் பகுதியில், வெள்ளிதோறும் மாட்டுச்சந்தை நடக்கும். தற்போது, மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கும் அபாயம் உள்ளதால், சேலம் கலெக்டர் ரோகிணி, கடந்த, 19ல், சந்தை நடத்த, இரு வாரங்கள் தடை விதித்தார். ஆனால், உத்தரவை மீறி, எம்.செட்டிப்பட்டி ஏரியில், சந்தை நடந்தது. தற்போது, பெருமாள்கோவில் பகுதி விவசாயி அண்ணாமலையின், இரு கன்று குட்டிகளுக்கு, கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால், தோட்டத்தில் தனியாக வைத்து பராமரிக்கிறார். அதேபோல், எம்.செட்டிப்பட்டியில், கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து, சிக்கம்பட்டி கால்நடை டாக்டர் ப்ரியதர்ஷினி கூறுகையில், ''பெருமாள்கோவில், எம்.செட்டிப்பட்டியில், 1,000 வளர்ப்பு மாடுகள் உள்ளன. அப்பகுதியில், கோமாரி நோய் தடுப்பு முகாம் நடத்தப்பட்டது. வியாபாரிகள், வெளியூரிலிருந்து வாங்கி வந்த மாடுகளில், நோய் இருந்திருக்கலாம். இதனால், அப்பகுதியில், மீண்டும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.


2 வாரங்களுக்கு தடை: கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கை: பருவநிலை மாற்றம், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், கால்நடைகளில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கால்நடைகளை விற்க, சந்தைகளுக்கு கொண்டு செல்லும்போது, அங்குள்ள மற்ற கால்நடைகளுக்கு பரவ வாய்ப்புள்ளது. அதனால், சேலம் மாவட்டத்தில், திங்கள்தோறும் நடக்கும் மின்னாம்பள்ளி, வெள்ளியில் நடக்கும் முத்துநாயக்கன்பட்டி, சனியில் நடக்கும் வீரகனூர் கால்நடை சந்தைகள், டிச., 22 வரை நிறுத்திவைக்கப் படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X