விமான நிலையத்தை முற்றுகையிட புறப்பட்ட 90 பேருக்கு 'காப்பு' | சேலம் செய்திகள் | Dinamalar
விமான நிலையத்தை முற்றுகையிட புறப்பட்ட 90 பேருக்கு 'காப்பு'
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
08:17

சேலம்: விமான நிலையத்தை முற்றுகையிட புறப்பட்ட, மனித நேய ஜனநாயக கட்சியினர், 90 பேரை, போலீசார் கைது செய்தனர். டிசம்பர், 6ஐ, முஸ்லிம் அமைப்பினர், கறுப்பு தினமாக அனுசரித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி, நேற்று, சேலம், காமலாபுரம் விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, மனித நேய ஜனநாயக கட்சியினர் அறிவித்திருந்தனர். போலீசார் அனுமதி மறுத்த நிலையில், ஐந்து ரோட்டிலிருந்து, ஊர்வலமாக புறப்படப்போவதாக அறிவித்தனர். இதனால், துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில், 200 போலீசார் குவிக்கப்பட்டனர். மதியம், 12:00 மணிக்கு, அக்கட்சியின் மாநில அவைத்தலைவர் நாசர் உமரி தலைமையில், 90 பேர் திரண்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின், வாகனங்களில் ஏறி, விமான நிலையத்துக்கு புறப்பட தயாரான நிலையில், அனைவரையும் கைது செய்த போலீசார், திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.

* டிச., 6 சம்பவத்தை முன்னிட்டு, சேலம் தலைமை தபால் அலுவலகம் முன் மற்றும் ஓமலூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, த.மு.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X