| வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம்: பெருமாள் கோவில்களில் இன்று தொடக்கம் Dinamalar
வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம்: பெருமாள் கோவில்களில் இன்று தொடக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
08:17

சேலம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில், பகல் பத்து உற்சவம் இன்று தொடங்குகிறது.


சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், பகல் பத்து உற்சவம், இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு, டிச., 17 வரை, தினமும் மாலை, 5:00 மணிக்கு, அழகிரிநாதர், திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், திருமொழி வேதபாராயணம் சேவித்தல், திருவாராதனம், திருக்கொட்டாரத்தில் பக்தி உலாவுதல் ஆகியவை நடக்கிறது. டிச., 18ல் வைகுண்ட ஏகாதசி, 19 முதல், டிச., 29 வரை, ராப்பத்து உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர். அதேபோல், இரண்டாவது அக்ரஹாரம் லட்சுமி நரசிம்ம பெருமாள், செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி, பாண்டுரங்கநாதர், சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி உள்பட சேலம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் இன்று தொடங்குகிறது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X