சங்ககிரி: திருநெல்வேலி, செங்கோட்டை, வல்லம் பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் பால்ராஜ், 46. கடந்த ஏப்ரலில், தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜிடம், டாரஸ் லாரியை விலைக்கு வாங்கினார். அந்த லாரியை, நேற்று, சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, அதன் பழுதை சரிசெய்து, பெயின்ட் அடிக்க, நவ., 30ல், பால்ராஜ் ஓட்டிவந்தார். 'வாட்டர் சர்வீஸ்' செய்த பின், அன்றிரவு, 8:30 மணிக்கு, கொங்கணாபுரம் பிரிவு சாலையோரம் நிறுத்திவிட்டு, சாப்பிட சென்றார். திரும்பிவந்தபோது, லாரியை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், நேற்று, அவர் அளித்த புகார்படி, சங்ககிரி போலீசார் தேடிவருகின்றனர்.