14 தபால் அலுவலகங்களில் 'போஸ்ட் பேமென்ட்ஸ்' திட்டம் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
08:22

வேலூர்: ''இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சேவை, வேலூர் மாவட்டத்தில், 14 தபால் அலுவலகங்களில் துவங்கப்பட்டுள்ளது,'' என மாவட்ட மேலாளர் ஓம்கார் குஜ்ஜார் கூறினார்.


இதுகுறித்து, அவர் கூறியதாவது: டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் நோக்கில், தபால் அலுவலகங்களில், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சேவை திட்டத்தை மத்திய அரசு, கடந்த செப்., மாதம் துவங்கியது. வேலூர் மாவட்டத்தில், வேலூர் தலைமை தபால் அலுவலகம், சத்துவாச்சாரி, கலெக்டர் அலுவலகம், சி.எம்.சி., வேலூர் கோட்டை உட்பட, 14 கிளை தபால் அலுவலகங்களில், இத்திட்டம் நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இதில், ஜீரோ பேலன்சில், சேமிப்பு கணக்கு துவங்கிய பின், 100 ரூபாய் டிபாசிட் செலுத்த வேண்டும். கணக்கு துவங்க ஆதார் எண், கை ரேகையை பதிவு செய்ய வேண்டும். பின், கியூஆர் அட்டை வழங்கப்படும். இதைக்கொண்டு மின், தொலைபேசி கட்டணம் செலுத்தலாம். மொபைல் போன் ரீசார்ஜ் செய்யலாம். முதியோர் உதவித்தொகை, காஸ் மானியம், பி.எப்., பென்சன் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படும். எந்த வங்கிக்கும், தங்கள் கணக்கில் இருந்து, பண பரிவர்த்தனை செய்யலாம். இதற்காக, 'மொபைல் பேங்கிங்' என்ற ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. '15529' என்ற இலவச எண்ணில் அழைத்தால், வாடிக்கையாளர் வீட்டுக்கே சென்று, சேவை வழங்கப்படும். வேலூர் மாவட்டத்தில் உள்ள, 568 தபால் அலுவலகங்களில், இந்த சேவை விரைவில் துவங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X