| கடைகளை ஒதுக்க உத்தரவாதம்: கருத்து கேட்பு கூட்டத்தில் விவாதம் Dinamalar
கடைகளை ஒதுக்க உத்தரவாதம்: கருத்து கேட்பு கூட்டத்தில் விவாதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
08:22

வேலூர்: 'தற்போதுள்ள வியாபாரிகளுக்கு, கடைகள் ஒதுக்குவதாக, அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்கும் வரை, கடைகளை காலி செய்ய மாட்டோம்' என வியாபாரிகள் கூறினர்.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், வேலூர் நேதாஜி மார்க்கெட் இடிக்கப்பட்டு, இரண்டு அடுக்கு வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதற்காக, அங்கு வணிகம் செய்யும் வியாபாரிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் பேசுகையில், '' நேதாஜி மார்க்கெட்டை இடித்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், இரண்டு அடுக்கு வணிக வளாகத்தில், 1,069 கடைகள் கட்டி ஏலம் விடப்படும். ஏற்கனவே கடை வைத்துள்ளவர்களுக்கு, ஏலமின்றி, கடைகளை கொடுப்போம் என உத்தரவாதம் வழங்க முடியாது,'' என்றார்.


நேதாஜி மார்க்கெட் அனைத்து வணிகர் சங்க தலைவர் ஞானவேல் பேசியதாவது: நேதாஜி மார்க்கெட்டில், 752 நிரந்தர கடைகளும், 300 தரைக்கடைகளும் உள்ளன. இதை இடித்து விட்டு, இரண்டு தளமாக கட்டாமல், பழைய மீன் மார்க்கெட்டை இணைத்து, ஒரே தளமாக கட்ட வேண்டும். தற்போது, கடை வைத்துள்ளவர்களுக்கு, ஏலமின்றி கடை வழங்க உத்தரவாதம் அளிக்கும் வரை, கடைகளை காலி செய்ய மாட்டோம். இவ்வாறு, அவர் பேசினார். இதற்கு பதிலளித்த கலெக்டர், ''உத்தரவாதம் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி, அடுத்த கூட்டத்தில், பதில் அளிக்கப்படும்,'' என்றார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X