'சீல்' வைத்த கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
08:55

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், பூட்டி 'சீல்' வைத்த கடைகளை திறந்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புன்செய்புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக, பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில், 34 கடைகள் உள்ளன. கடந்த, 2014 செப்., மாதம் பொது ஏலம் விடப்பட்டது. இதில் நான்கு மட்டுமே ஏலம் போனது. மீதி, 29 கடைகள், 10 முறை ஏலம் நடத்தியும், ஏலம் போகவில்லை. 'மதிப்பீட்டு தொகை அதிகமாக உள்ளது. தொகையை குறைத்து ஏலம் விட வேண்டும்' என, ஏலத்தில் பங்கேற்றவர்கள் கூறினர். இதனால், 29 கடைகளை பூட்டி, நகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். ஏலதாரர்களின் கோரிக்கை குறித்து, மண்டல அதிகாரிகளுக்கு, அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உத்தரவுப்படி, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் காந்திராஜ், தாராபுரம் கமிஷனர் லட்சுமணன் தலைமையிலான ஏழு பேர் குழுவினர், நேற்று ஆய்வுக்கு வந்தனர். 'சீல்' வைத்த கடைகளை திறந்து, நீள, அகலம் உள்ளிட்ட அளவுகளை சரி பார்த்தனர். தனியார் கடைகளின் வாடகை, பொதுப்பணித்துறையின் வாடகை நிர்ணயம் ஆகியவற்றை கேட்டறிந்தனர். 'அதிகாரிகளின் ஆய்வறிக்கை, அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். ஏலத்தொகை நிர்ணயம் செய்து, உத்தரவு வந்தபின், கடைகள் ஏலம் விடப்படும்' என்று, புளியம்பட்டி நகராட்சி அதிகாரிகள் கூறினர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X