| மதுபான பார்களில் கண்ணாடி டம்ளர்: விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுரை Dinamalar
மதுபான பார்களில் கண்ணாடி டம்ளர்: விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
08:55

ஈரோடு: மதுபான பார்களில், கண்ணாடி டம்ளர்களை பயன்படுத்த, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தமிழகத்தில் ஜன., 1 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும், விற்கவும் தடை அமலாகிறது. எண்ணெய், பால், மாத்திரை போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும், பிளாஸ்டிக் பயன்படுத்தலாமென, அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், துறை ரீதியாக கூட்டம் நடத்தி, யோசனை தெரிவித்து வருகின்றனர். இதேபோல், ஈரோடு மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியம், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் பார் உரிமையாளர்கள் பங்கேற்ற, விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் டாஸ்மாக் பார்களில், பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் கரண்டிகளுக்கு பதில், கண்ணாடி டம்ளர், பாத்திரங்களில் தண்ணீரை வழங்க அறிவுறுத்தப்பட்டது. பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு பதில், தட்டு, பேப்பர் கவர்களில் வழங்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X