ஈரோடு: ஈஷா கிராமோத்சவ விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, பரிசு வழங்க, கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஈரோடு வருகிறார். இதுகுறித்து ஈஷா யோகா மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில், ஈஷா கிராமோத்சவ விளையாட்டு திருவிழா என்ற பெயரில், ஆண்களுக்கு வாலிபால், பெண்களுக்கு த்ரோபால் மற்றும் கபடி போட்டி நடக்கவுள்ளது. இதன் இறுதி போட்டிகள் வரும், 9ல், ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் நடக்க உள்ளது. விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு மற்றும் சான்று வழங்குகிறார். விழாவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கருப்பணன், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, பளு தூக்கும் வீராங்கனை மல்லேஸ்வரி உட்பட பலர் பங்கேற்கின்றனர். அன்று, காலை முதல் மாலை வரை, 15 வித கிராமிய விளையாட்டு போட்டி, கரகாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம் என, 10க்கும் மேற்பட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இவ்வாறு கூறியுள்ளனர்.