| ஒரு லட்சம் பாரம்பரிய மரக்கன்று உற்பத்தி: டெல்டா விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு Dinamalar
ஒரு லட்சம் பாரம்பரிய மரக்கன்று உற்பத்தி: டெல்டா விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
08:59

ஈரோடு: 'ஈரோடு சிறகுகள் அமைப்பு' சார்பில், டெல்டா விவசாயிகளுக்கு, ஒரு லட்சம் பாரம்பரிய மரக்கன்று வழங்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.


'ஈரோடு சிறகுகள்' அமைப்பு சார்பில், ஈரோடு மாநகரம் மற்றும் பிற பகுதிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்நிலையில், புயலால் பாதித்த, டெல்டா மாவட்டத்துக்கு, ஒரு லட்சம் பாரம்பரிய மரக்கன்று வழங்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து அமைப்பின் தலைவர் விமல் கருப்பணன் கூறியதாவது: திருவாரூரில் வனம் என்ற அமைப்பு, தமிழ்நாடு இயற்கை ஆர்வலர்கள் சங்கம் ஆகியோருடன் இணைந்து, தென்னை, பனை, வேம்பு, ஆலம், அரசமரம், அத்தி, மூங்கில் உள்ளிட்ட மரக்கன்றுகளை வளர்க்கிறோம். வனத்துறை, ஈஷா போன்ற மரம் வளர்க்கும் அமைப்புகள், இயற்கை ஆர்வலர்களிடமும் கேட்டுள்ளோம். தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இவற்றை நடவுள்ளோம். இதில்லாமல், 300க்கும் மேற்பட்ட அமைப்பினர், தனி நபர், ஆர்வலர்கள் மரம் மற்றும் விதையாக வழங்க முன்வந்துள்ளனர். இதையும் எடுத்து சென்று, எங்கள் அமைப்பினர் மூலமே, இடங்களை தேர்வு செய்து நட்டு வரவுள்ளோம். ஒரு லட்சம் என்ற எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X