| அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி Dinamalar
அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:04

சுகாதார வளாக கட்டடம் வீண்: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, கோபாலபுரம் பஞ்.,ல், 12 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த, 2011-12ல், புதுப்பிக்கப்பட்டது. மின்மோட்டார் பழுதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, பஞ்., நிர்வாகம் சுகாதார வளாகத்துக்கு பூட்டுபோட்டது. திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலையில், பெண்களும், சிறுமியரும் உள்ளனர். மோட்டார் மற்றும் கட்டடத்தை புதுப்பித்து, சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்.


பராமரிப்பில்லாத சமுதாயக்கூடம்: தர்மபுரி அடுத்த, டொக்குபோதனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட, சிவக்கலகொட்டாயில், ஏராளமான வீடுகள் உள்ளன. கடந்த, எட்டு ஆண்டுகளுக்கு முன், ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை சார்பில், எம்.பி., தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இது, தற்போது முறையான பராமரிப்பு இல்லாததோடு, மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக தொகை கொடுத்து, தனியார் மண்டபங்களில் இல்ல விசேஷங்களை நடத்த வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.


சின்டெக்ஸ் தொட்டி பயனுக்கு வருமா? தர்மபுரி அடுத்த, குப்பூர் பஞ்.,க்கு உட்பட்ட, தூதரையன் கொட்டாயில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு, கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு முன், சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது. கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், இதன் மின்மோட்டார் பழுதால், தண்ணீர் வருவதில்லை. இதனால், இப்பகுதி மக்கள் குடிநீர் பற்றாக்குறையால், அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் பலர், காசு கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மோட்டார் பழுதை நீக்க வேண்டும்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X