| வெளி மாநில மது விற்றவர் கைது Dinamalar
வெளி மாநில மது விற்றவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:05

தர்மபுரி: வெளி மாநில மதுபானம் பதுக்கி விற்பனை செய்த வாலிபரை, கலால் போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து, மதுபானங்களை குறைந்த விலைக்கு வாங்கி, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில், அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து, தகவலறிந்த, தர்மபுரி கலால் போலீசார், பென்னாகரத்தை அடுத்த, கரியம்பட்டியில் சோதனையில் ஈடுபட்டனர். இதே பகுதியை சேர்ந்த ஜெயவேல், 29, என்பவர், 165 கர்நாடகா மாநில மதுபான பேப்பர் டின்னை பதுக்கி வைத்திருந்தது, தெரியவந்தது. ஜெயவேலை கைது செய்த போலீசார், மதுபான டின்களை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் தர்மபுரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X