| சமூக விரோதிகள் புகலிடமான சமுதாயக்கூடம்: மக்கள் கொதிப்பு Dinamalar
சமூக விரோதிகள் புகலிடமான சமுதாயக்கூடம்: மக்கள் கொதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:06

பென்னாகரம்: போடூர் சமுதாயக்கூடம் திறக்கப்படாததால், அரசு பணம் வீணாவதுடன், சமூகவிரோதிகளின் புகலிடமாக, மாறியுள்ளதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட போடூர் காலனியில், கடந்த, 2014-15ல், எம்.பி., நிதியின் கீழ், 20 லட்ச ரூபாய் மதிப்பில், சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகளாகியும், சமுதாயக்கூடம் திறக்கப்படாமல், பூட்டியே உள்ளது. இதனால், போடூர் காலனி, நீர்குந்து உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் நடுத்தரமக்கள், சுபகாரிய நிகழ்ச்சிகளை, அதிக செலவிட்டு, தனியார் மண்டபங்களில் நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர். பூட்டியுள்ள சமுதாயக்கூடம், யாருக்கும் பயனின்றி, குடிமகன்கள், சமூக விரோதிகளின் புகலிடமாக உள்ளது. குடித்து கும்மாளமிடும் சிலர், பாட்டில்களை உடைத்து வீசுகின்றனர். பூட்டிய கட்டடம் சேதமடைவதோடு, அரசுப்பணமும் வீணாகிறது. எனவே, 'சமுதாயக்கூடத்தை திறந்தால், ஏழை எளிய மக்கள் குறைந்த செலவில், சுபகாரியங்களை நடத்த உதவியாக இருக்கும்' என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X