| சாமந்தி விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி Dinamalar
சாமந்தி விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:07

தர்மபுரி: சாமந்தி பூ விளைச்சல் அதிகரித்துள்ளதுடன், போதிய விலை கிடைத்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 2,600 ஏக்கருக்கும் மேல், சாமந்தி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கார்த்திகை, மார்கழி, புத்தாண்டு, பொங்கல் சீசனை முன்னிட்டு, கடந்த, சில மாதங்களுக்கு முன், சாமந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். சில தினங்களுக்கு முன் பெய்த மழையால், சாமந்தி பூத்துக்குலுங்குகிறது. தற்போது, கிலோ, 70 ரூபாய் வரை, சாமந்தி விற்பனையாகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தேவை அதிகரிப்பால், 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. சாகுபடி செலவு, பூப்பறிக்கும் விவசாய கூலி தொழிலாளர்களின் ஊதியம் போக, தங்களுக்கும், சாமந்தி வருவாயை ஈட்டித் தருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 'புத்தாண்டு, பொங்கல் பண்டிகையின் போது, சாமந்தி விலை, மேலும் அதிகரிக்கும்' என, விவசாயிகள் கூறினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X