பெயர் பலகையை மறைத்து பேனர்: குமாரபாளையத்தில், ஒவ்வொரு தெருவின் முன்பும், தெருவின் பெயர் குறிப்பிட்டு நகராட்சி சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதை மறைக்கும் விதமாக, பல இடங்களில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது போல், பல பகுதிகளில், பெயர் பலகையை மறைத்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் இருந்து வரும் மக்கள், வியாபாரிகள், நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
- பி.பூபதிபாண்டியன், குமாரபாளையம்.
நிற்காத பஸ்களால் அவதி: மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை அடுத்த, மின்னாம்பள்ளி, ராசிபுரம்- தி.கோடு சாலையில் உள்ளது. இவ்வழியாக, 10 நிமிடத்திற்கொருமுறை அரசு, தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. ஆனால், இங்கு எந்த பஸ்சும் நிற்பதில்லை. வேறுவழியின்றி, 2 கி.மீ., தொலைவில் உள்ள வையப்பமலைக்கு செல்லவேண்டிய சூழல் உள்ளது. அனைத்து பஸ்களும் நின்றுசெல்ல, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.அண்ணாதுரை, மின்னாம்பள்ளி