| காப்பீட்டுத் திட்டத்தில் இலக்கு நிர்ணயம்: தவிர்க்க வேளாண் அலுவலர்கள் வலியுறுத்தல் Dinamalar
காப்பீட்டுத் திட்டத்தில் இலக்கு நிர்ணயம்: தவிர்க்க வேளாண் அலுவலர்கள் வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:39

நாமக்கல்: 'பயிர் காப்பீட்டு திட்டத்தில், உதவி வேளாண் அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கு இலக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும்' என, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. சங்கத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். செயலாளர் சிவக்குமார், அமைப்பு செயலாளர் குழந்தைசாமி ஆகியோர் பேசினர். கடந்த, 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த அட்மா திட்ட தற்காலிக பணியாளர்களை, மாறுதல் உத்தரவு வழங்கிய வேளாண் இணை இயக்குனருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டு மன்ற குழுக்கூட்டத்தை கூட்டி, உறுப்பினர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தில், உதவி வேளாண் அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கு, இலக்கு வழங்கி திணிப்பதை நிறுத்தவும், தனியார் நிறுவனத்தினரை கூடுதல் பணியாளர்களை அமர்த்தி, பணியாற்ற வழிவகை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் பயிர் அறுவடை பணியாளர்கள், 17 பேர் மட்டுமே உள்ளனர். பயிர் அறுவடை பரிசோதனை, வட்டாரத்துக்கு, 200 முதல், 300 வரை வருகின்றன. அதனால், வட்டாரத்துக்கு, இரண்டு தற்காலிக பணியாளர்கள் வீதம், 30 பேரை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X