| மின்சாரம் வராததால் பொதுமக்கள் அவதி Dinamalar
மின்சாரம் வராததால் பொதுமக்கள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:39

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டையில், குறிப்பிட்ட நேரத்திற்கு மின்சாரம் வராததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.


துணை மின்நிலையங்களில், மாதாந்திர பாராமரிப்பு பணி நடக்கும் நாட்களில் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். இதையொட்டி, சில நாட்களுக்கு முன், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், எந்த மின்நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்று அறிவித்து விடுவர். நாமகிரிப்பேட்டை துணை மின்நிலையத்தில், நேற்று பராமரிப்பு பணி நடந்தது. அதற்காக, சுற்றியுள்ள கிராமங்களில் காலை, 9:00 முதல், மதியம், 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவித்திருந்தனர். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு மின் வினியோகம் தொடங்கியது. இதனால், 2:00 மணிக்கு மின்சாரம் வரும் என, எதிர்பார்த்த தொழிலாளர்கள் ஏமாற்றமடைந்தனர். சில மாதங்களாகவே, இதேபோல், 2:00 மணி என குறிப்பிட்டு, 5:00 மணிக்கு மின்சாரம் வருகிறது என, புகார் எழுந்துள்ளது. இனிமேல், அறிவிப்புகளில், சரியான நேரத்தை குறிப்பிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X