| 'காவலன் செயலி' குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி Dinamalar
'காவலன் செயலி' குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:40

ராசிபுரம்: ராசிபுரம், அரசு கலைக் கல்லூரியில், போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக, பல தொல்லைகள் ஏற்படுகிறது. இதை தடுக்கும் விதமாக, போலீஸ் துறை சார்பில், 'காவலன் செயலி' எனும், மொபைல் செயலி, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவியரிடம், போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், டி.எஸ்.பி., விஜயராகவன் பேசினார். அதில், 'மாணவியர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த செயலியை உங்கள் மொபைலில் பதிவுசெய்து, ஆபத்து வரும்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவியர், பொது இடங்களில் செல்லும்போது, 'சிசிடிவி' கேமராக்கள் அங்குள்ளனவா என, எச்சரிக்கையுடன் இருங்கள்' என்றார். தொடர்ந்து, செயலி பதிவிறக்கம் செய்து, எவ்வாறு பயன்படுத்துவது என விளக்கம் அளித்தார். எஸ்.ஐ., பூபதி, பேராசிரியர்கள், மாணவியர் கலந்துகொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X