| குறுகலான சாலையில் வாகனஓட்டிகள் தவிப்பு Dinamalar
குறுகலான சாலையில் வாகனஓட்டிகள் தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:40

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், குமரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இருந்து, போக்கம்பாளையம் செல்லும் சாலையில், ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இச்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், எதிரெதிரே வரும் வாகனங்கள், சிரமப்பட்டு செல்கின்றன. ஒரு சில நாட்களில், வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு விபத்துகள் ஏற்படுகின்றன. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், சாலையை விரிவாக்கம் செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X