| மின் நிறுத்த நாளில் கட்டணம் பெற மறுப்பு Dinamalar
மின் நிறுத்த நாளில் கட்டணம் பெற மறுப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:44

குமாரபாளையம்: மாதாந்திர மின் நிறுத்த நாளில், மின் கட்டணம் பெற மறுக்கப்பட்டதால், குமாரபாளையம் மக்கள் அவதிக்குள்ளாகினர்.


குமாரபாளையம், குளத்துக்காடு பகுதியில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. நேற்று, பராமரிப்பு பணிகளுக்காக, மாதாந்திர மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. வழக்கம்போல், பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தச் சென்றபோது, 'மின் நிறுத்தம் என்பதால், மின் கட்டணம் பெற இயலாது' என, கட்டணம் பெறுபவர் கூறியதால், மக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து, மின்வாரிய உதவி இயக்குனர் சீனிவாசன் கூறியதாவது: மின்சாரம் நிறுத்தப்படும் நாட்களில், யு.பி.எஸ்., வைத்தாவது மின்கட்டணம் வாங்கப்பட வேண்டும். அது இல்லாத பட்சத்தில், கட்டணத் தொகையை வாங்கிக் கொண்டு, பிறகு அதற்குரிய ரசீதை தரலாம். இதுகுறித்து, விசாரிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X