| விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை மாநாடு Dinamalar
விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை மாநாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:45

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ஜனநாயக விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், புதிய கூலி உயர்வு கோரிக்கை மாநாடு நடந்தது. தலைவர் பொன்.கதிரவன் தலைமை வகித்தார். பொது செயலாளர் கோவிந்தராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யு., தேசிய செயலாளர் நடராஜன் ஆகியோர் பேசினர். விசைத்தறி ஓட்டுபவர், பாவு ஓட்டுபவர், அச்சு பிணைப்பவர், மேஸ்திரி ஆகியோருக்கு கூலி உயர்வு குறித்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விசைத்தறி தொழிலாளர்களின் குழந்தைகளான மாணவ, மாணவியர், 20 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், வரும், ஜன., 8,9ல் நடத்தப்பட உள்ள பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என்ற சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X