| அலுவலக உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு Dinamalar
அலுவலக உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:47

நாமக்கல்: தொழிலாளர் துறையில், காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதுகுறித்து, தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை, கூடுதல் தொழிலாளர் கமிஷனர் எல்லைக்குட்பட்ட, திருப்பூர், குன்னூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகங்களில், காலியாகவுள்ள, ஐந்து அலுவலக உதவியாளர் பணிக்கு, இன சுழற்சி விதிப்படி, நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 2018 ஜூலை, 1ல், 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு, பொதுப்பிரிவினர், 30 வயதுக்குள், பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர், 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உச்சவயது வரம்பு இல்லை. விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்கும் வழிமுறை, தகுதி உள்ளிட்ட இதர விபரங்களை, http://www.labour.tn.gov.in/labour/recruitments.jsp என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.விண்ணப்பங்களை, 'கூடுதல் தொழிலாளர் கமிஷனர் அலுவலகம், டாக்டர் பாலசுந்தரம் சாலை, ஆர்.டி.ஓ., அலுவலக வளாக பின்புறம், கோவை - 641018' என்ற முகவரிக்கு, டிச., 28 மாலை, 5:30க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X