வணிக வளாகம் அமைக்கப்பட வேண்டும்: குளித்தலை பஸ் ஸ்டாண்ட் மற்றும் காவேரி நகரில் உள்ள, அண்ணா திருமண மண்டபத்தில் தடுப்புச்சுவர் அருகில், பயனின்றி காலி இடம் உள்ளது. தொழில் செய்வதற்கு கடைகள் இல்லாமல், பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், வணிக வளாகம் அமைத்தால், பொது மக்கள் குறைந்த கட்டணத்தில் கடைகள் அமைத்து, தொழில் செய்ய ஏதுவாக இருக்கும்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- ரா.ரேகா, குளித்தலை.
தார்ச்சாலையை புதுப்பிக்க வேண்டும்: கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மருதூர் முதல், மேட்டுமருதூர் வழியாக பணிக்கம்பட்டி செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் திருச்சி, முசிறியில் இருந்து அரசு பஸ்கள் சரிவர வருவதில்லை. இச்சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் வந்து செல்ல முடியவில்லை. மற்ற வாகனங்கள் செல்லமுடியாத வகையில் சாலை உள்ளது. மோசமான நிலையில் உள்ள சாலையை மாற்றி, புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
- ந.செல்வி, மேட்டுமருதூர்.