| தோகைமலையில் இலவச கண் சிகிச்சை முகாம் Dinamalar
தோகைமலையில் இலவச கண் சிகிச்சை முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:48

குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகை மலையில் உள்ள சமுதாயக் கூடத்தில் நேற்று காலை, 10:00 மணியளவில் ஏ.பி.எஸ். சூப்பர் மார்க்கெட் மற்றும் முசிறி சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்கை முகாம் நடந்தது. சங்கரா மருத்துவமனை டாக்டர்கள் குருராஜா, செல்வராஜ், ராஜகுமார் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவக் குழுவினர் சார்பில், கண்புரை பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 20 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து, ஐ.ஓ., லென்ஸ் பொருத்துவதற்கு பரிந்துரை செய்தனர். கண்ணில் லென்ஸ், சிகிச்சைக்கான மருந்து, கண் கண்ணாடி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. 150 பேர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மார்க்கெட் உரிமையாளர் பால்ராஜ் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X