| மாணவி மாயம்: பெற்றோர் புகார் Dinamalar
மாணவி மாயம்: பெற்றோர் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:49

குளித்தலை: கடைக்கு சென்ற, பள்ளி மாணவி மாயமானார். இதையடுத்து, தந்தை கொடுத்த புகார்படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளித்தலை அடுத்த, கும்மரங்கன்பட்டியை சேர்ந்தவர் ரத்தினம், 56. இவருடைய, 15 வயது மகள் இங்குள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த, 3ல் இரவு, 7:30 மணியளவில் கடைக்கு சென்ற மாணவி, வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X