| மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி: 100 படைப்புகள் காட்சிப்படுத்தல் Dinamalar
மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி: 100 படைப்புகள் காட்சிப்படுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:50

கரூர்: கரூர் மாவட்டம், புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கலெக்டர் அன்பழகன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஒன்பது முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒரு பள்ளிக்கு, இரு மாணவர்கள் வீதம், 200 பேர் தங்களின் வழிகாட்டி ஆசிரியர்களுடன் பங்கேற்றனர். உணவு பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல், நகரும் பொருட்களில் அறிவியல் கண்டுபிடிப்புகள், இயற்கை பாதுகாப்பு, கணிதவியல், அறிவியல் உள்பட, எட்டு தலைப்புகளில், 100 விதமான படைப்புகளை மாணவ, மாணவியர் காட்சிப்படுத்தினர். ஒவ்வொரு தலைப்பிலும் தலா, மூன்று பரிசுகள் வீதம், 24 படைப்புகளுக்கு வழங்கப்படவுள்ளது. முதல் பரிசு, 1,500 ரூபாய், இரண்டாம் பரிசு, 1,000, மூன்றாம் பரிசாக, 500 ரூபாய் வழங்கப்படும். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். முதன்மை கல்வி அலுவலர் தங்கவேல், மாவட்ட கல்வி அலுவலர்கள் கனகராஜ், கபீர், பள்ளி தலைமையாசிரியர் ஜோதிமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X