| கடும் துர்நாற்றம் வீசும் பள்ளிவாசல் கழிவுநீர் வடிகால் Dinamalar
கடும் துர்நாற்றம் வீசும் பள்ளிவாசல் கழிவுநீர் வடிகால்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:51

குளித்தலை: கடும் துர்நாற்றம் வீசும் பள்ளிவாசல் கழிவுநீர் வடிகால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். குளித்தலை பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, பள்ளிவாசல் பகுதியில் நகராட்சி பொது கழிவு நீர் வடிகால் உள்ளது. குடியிருப்புகள், பொது கழிப்பறை, மழை தண்ணீர் மற்றும் ஹோட்டலில் இருந்து வெளியேறும் தண்ணீர் அனைத்தும், கழிவு நீர் வடிகாலில் தேங்குகிறது. கழிவுநீர் வடிய வழியில்லாததால், நீர் தேக்கம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதிலிருந்து பல்வேறு தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. தேங்கிய கழிவு நீரை வெளியேற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X