அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:51

சாலையில் முட்செடி அகற்றப்படுமா? கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பகுதியில் இருந்து மாரியம்மன் கோவில் செல்லும் தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். மாரியம்மன் கோவில் அருகில், சாலை இருபுறமும் அதிகமான முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையில் செல்லும் போது சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள், முட்செடிகளால் காயமடைகின்றனர். வளர்ந்து வரும் முட்செடிகளை அகற்ற வேண்டும்.


சாலையில் பள்ளம்; சரி செய்யணும்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மணவாசி டோல்கேட் செல்லும் வழியில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அருகில், வாகனம் நிறுத்தும் பல இடங்களில், கற்கள் பெயர்ந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், சாலை வழியாக செல்லும் விவசாயிகள், சைக்கிளில் செல்லும் போது தவறி விழுந்து விடுகின்றனர். இந்த அவதி பல நாட்களாக தொடர்கிறது. மோசமான சாலை பள்ளத்தை, சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குப்பை தேக்கம்; சுகாதார சீர்கேடு: கிருஷ்ணராயபுரம் அடுத்த, கரூர் நெடுஞ்சாலையில் உள்ள மாயனூரில், சாலையோரத்தில் மழை நீர் செல்லும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சாலையில் வரும் மழைநீர் முழுவதும், கால்வாய் வழியாக சென்று, வாய்க்காலில் கலக்கும் வகையில் உள்ளது. இந்த நிலையில் மாயனூரில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் அனைத்தும், மழைநீர் செல்லும் பாலம் அருகில் கொட்டப்படுகிறது. இதனால், மழைநீர் செல்வதில் தடை ஏற்படுகிறது.


வாய்க்காலில் செடிகள்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூரில் இருந்து, மகிளிப்பட்டி வழியாக திருச்சி வரை கட்டளை மேட்டுவாய்க்கால் செல்கிறது. இதன் மூலம், விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை, வெற்றிலை, நெல் ஆகிய பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. இந்த பாசன வாய்க்காலில் அதிகமான ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்øளால், பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் தடை உள்ளது. செடிகள் அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஒயர்களில்படும் மரக்கிளைகள்: கரூர் - திருச்சி நெடுஞ்சாலை, மாயனூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி சுற்றுச்சுவர் அருகில் மரங்கள் உள்ளன. இவைகளின் கிளைகள் வளர்ந்து, அருகில் செல்லும் மின்சார ஒயர்களில் தாழ்வாக படர்ந்துள்ளது. கிளைகள் மூலம், மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பள்ளி அருகில் மரம் இருப்பதால், மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். மரக்கிளைகள் வெட்டி அகற்ற, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X