இயற்கை விவசாயம், பாரம்பரிய ரக மீட்டெடுப்பில் ஆர்வம்: 174 பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்த 'நெல் ஜெயராமன்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
12:05

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அருகே கட்டிமேட்டில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன்,58; திருத்துறைப்பூண்டி அருகே 'ஆதிரெங்கம் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்' என துவங்கி, அதன் இயக்குனராக இருந்தார். பாரம்பரிய நெல் ரகங்களை காக்க வேண்டும் என, அவற்றை மீட்டெடுத்தார். கலப்பினங்களை தவிர்க்க வேண்டும். இயற்கை விவசாயத்துக்கு மீண்டும் செல்ல வேண்டும் என, உழைத்தார். இதனால், இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வார், 'நெல் ஜெயராமன்' என, இவரை அழைத்தார். நம்மாழ்வாருடன் இணைந்து, இயற்கை விவசாயத்தையும், பாரம்பரிய விதைகளையும் வலியுறுத்தி, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, மகராஷ்டிரா என, பல மாநிலங்களுக்கு சென்று, நெல் ரகங்களை பாதுகாப்பது குறித்து, ஆர்வலர்கள் அமைப்புடன் பேசினார். அவர்கள் உதவியுடன், அந்தந்த பகுதியில் உள்ள பாரம்பரிய நெல் ரக விதைகளை சேகரித்தார். மரபணு மாற்றத்துக்கு எதிராக போராடியதுடன், பாரம்பரிய நெல் விதையை, தன் முயற்சியில் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வினியோகித்தார். மரபணு மாற்று விதைகளால் புற்றுநோய் ஏற்படும். பாரம்பரிய விதை அழிந்தால், உண்மையான உணவை இழந்துவிடுவோம், எனக்கூறி போராடினார். இவரது பேச்சும், எழுத்தும், முயற்சியும், பல நாடுகளுக்கு சென்று, அங்குள்ளவர்கள், இவரை தொடர்பு கொண்டு, இவரது முயற்சியில் பலனை பெற்றனர். 20 ஆண்டுகளக்கு மேலாக பாரம்பரிய நெல் திருவிழாவை நடத்தி, பல நாடுகளை சேர்ந்த இயற்கை ஆர்வலர்களை அழைத்து வந்தார். அவ்விழாவில், விவசாயிகள், கல்லூரி மாணவ, மாணவியர், இளைஞர்கள், இயற்கை ஆர்வலர்களை பங்கேற்க செய்தார்.


கடந்த, 2006ல் ஆறு வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்து, தேசிய அளவிலான நெல் திருவிழாவாக கொண்டாடினார். ஒவ்வொரு திருவிழாவிலும், இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, இலவசமாக, இரண்டு கிலோ பாரம்பரிய நெல்லை வழங்கினார். கடந்த, 12 ஆண்டுகளில், 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, 33 ஆயிரம் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை வங்கி, அவற்றை விரிவுபடுத்தி உள்ளார். அத்துடன், மரபணு மாற்று விதைகளுக்கு எதிராக, 'நமது நெல்லை காப்போம்' என்ற அமைப்பை துவக்கி, அதில், மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பணி செய்தார். கடந்த, 2017 ல் சிறுநீரகத்தில் கல் அடைப்பு ஏற்பட்டு, திருத்துறைபூண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீர் வழிபாதையில் சதை வளர்ந்ததாக கூறி, அவரது சதையை ஆய்வுக்கு அனுப்பியபோது, அவருக்கு தோலில் பரவும் கேன்சர் ஏற்பட்டது தெரியவந்தது. அப்போது முதல், சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்தார். அரசு சார்பில் அவருக்கு, 5 லட்சம் ரூபாய் நிதியுதவியும், சிகிச்சைக்கு சில உதவிகளும் செய்யப்பட்டன. நடிகர்கள் உட்பட பல அமைப்பினர் உதவினர். இருப்பினும், நேற்று காலை, 5:10 மணி அளவில் அவர் காலமானார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.


மீட்டெடுத்த 174 பாரம்பரிய நெல்: ஒவ்வொரு பாரம்பரிய நெல் ரகத்தையும் சேகரித்து, அதன் பெயர், அதற்கான காரணம், அதன் தன்மை, எந்த பகுதிக்கு ஏற்ற சூழல், அந்நெல்லின் சிறப்பு ஆகியவற்றை, அவர் பதிவு செய்துள்ளார். அந்நெல்லை முறையாக உற்பத்தி செய்து, பெருகச் செய்தார்.


அவர் மீட்டெடுத்த, 174 நெல் ரகங்களில் சில: அன்னமர்கி, முற்றுசன்னம், குடவார், காட்டுயாணம், கருப்பஞ்சீரக சம்பா, காட்டுப்பான்னி, கடலச்சம்பா, குருவிக்கார், வரப்பஞ்குடைஞ்சான், குறுவை களஞ்சியம், சம்பஞ்சம்பா, காலாநமக், பிசினி, வெள்ளை குருவிகார், காட்டுச்சம்பா, கருங்குறுவை, காட்டுக்குத்தாலம், பாசுமதி, வாசனை சீரகச்சம்பா, இலுப்பை சம்பா, துளசி வாச சீரக சம்பா, கந்தசாலா, சன்ன சம்பா, நவரா, கிச்சலி சம்பா, கைவரச்சம்பா, தாயகச்சம்பா, நீச்சம்பா, மணல்வாரி, கருடன் சம்பா, கட்டை சம்பா, ஆத்துள கிச்சலி, குந்தாவி, முற்றின் சன்னம், ஒட்டடையான், வாடன் சம்பா, காடைக்கல்புத்தான், நீலச்சம்பா, வைகுண்டா, கம்பக்காளி, கலியன் சம்பா, அடுக்கு நெல், சாரக்குறுவை, வாலான், பயகுண்டா, மதிமுனி, ரசகடம், கல்லுருண்டையான், காட்டு வாணிபம், சம்பா, மரநெல், கல்லுண்டை, கார் நெல், ராகமல்லி, சூடாநெல், சித்த சன்னா, கட்கா, மிளகி உட்பட, 174 ரகங்களாகும். இவை, பல்வேறு பகுதிகளில் தற்போது பாதுகாத்து, தொடர்ந்து பயிரிடப்படுவது, அவரது முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.


- நமது சிறப்பு நிருபர் -


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X