26 மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: அரசுக்கு சம்மேளன தலைவர் வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
12:06

நாமக்கல்: ''மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்த 26 மணல் குவாரிகளை திறக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கூறினார்.


இதுகுறித்து, நாமக்கல்லில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மணல் குவாரிகளை இயக்குவதில், பொதுப்பணித்துறை படுதோல்வி அடைந்து விட்டது. தனியார் குவாரிகளை இயங்கியபோது, சில முறைகேடுகள் நடந்தது உண்மை தான். 'அரசே நேரடியாக குவாரிகளை இயக்கினால், இணையதளம் மூலம் குறைந்த விலைக்கு மணல் கிடைக்கும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஆனால், இரு மாதங்கள் மட்டுமே, இணையதளம் மூலம் மணல் வழங்கப்பட்டது. தனியார் குவாரி நடந்தபோது, தினமும், 20 ஆயிரம் லோடு வழங்கினர். தற்போது, நாமக்கல் மாவட்டம் குமரிபாளையத்தில், ஒரே ஒரு அரசு மணல் விற்பனை நிலையம் செயல்படுகிறது. தமிழகத்திற்கு, 30 ஆயிரம் லோடு மணல் தேவை. இதனால், கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. இணையதளத்தில் பதிவு செய்து, 55 ஆயிரம் லாரி உரிமையாளர்கள், 25 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தி, ஐந்து மாதங்களாக காத்திருக்கின்றனர். அவர்கள், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல், தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ஆதிக்க சக்திகள், நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் எடுத்து கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு கடத்தி, அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றன. மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம், 26 மணல் குவாரிகளை இயக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால், தமிழக அரசு, அதற்கு ஆர்வம் காட்டாமல் மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்கிறது. விலை அதிகம் என்பதால், அவற்றை வாங்க பயனாளிகள் ஆர்வம் காட்டவில்லை. எனவே, 26 மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும். தமிழகத்தில், ஏறத்தாழ, 300 செயற்கை மணல் (எம்.சாண்ட்) நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 50 நிறுவனங்கள் மட்டுமே, தர கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்றுள்ளன. தரச்சான்று பெறாமல் இயங்கி வரும், செயற்கை மணல் உற்பத்தி நிறுவனங்களை தடை செய்து, உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X