அதிகாரிகள் குறட்டையால் காவிரியில் சாயக்கழிவுநீர் சங்கமம்: 12 மாவட்ட மக்களின் குடிநீர் ஆராதாரம் கடம் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
12:07

சாயப்பட்டறைகளில் இருந்து, சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீர், காவிரி ஆற்றில் கலக்கிறது. அதனால், தமிழகத்தில், 12 மாவட்டங்களில் நீராதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், ஏராளமான நூல் மற்றும் ஜவுளி சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில், அனுமதி பெறாதவை அதிகம். ஆலைகளில் இருந்து கழிவுநீரை, சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் என்பது விதி. ஆனால், அதை யாரும் பின்பற்றுவதில்லை. மாறாக, அதை சுத்திகரிப்பு செய்யாமல், காவிரி ஆற்றில் திறந்து விடுகின்றனர். மேலும், பதிவு பெற்ற, பதிவு பெறாத சாயப்பட்டறைகள், நிலத்துக்கடியில், பிளாஸ்டிக் குழாய் பதித்து, சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுநீரை நேரடியாக காவிரியில் விடுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


சமூக விரோத செயல்: இத்தகைய பட்டறைகள், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திப்பாளையம், சில்லாங்காடு போன்ற பகுதிகளில் உள்ள கிராமங்களில் அதிகம் உள்ளன. இது, காவிரி குடிநீரை பெரிதும் பாதிக்கிறது. இப்பகுதியில், 3,000க்கும் மேற்பட்ட சிறு, குழு சாயப்பட்டறைகள், இச்சமூக விரோத செயலை அரங்கேற்றி வருகின்றன. மேலும், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு சாயப்பட்டறைகள், எந்த அனுமதியும் பெறாமல், முறைகேடாக இயங்கி வருகின்றன. குமாரபாளையம், பள்ளிபாளையத்தை சேர்ந்த, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், சுத்திரிக்கப்படாத, கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். தினமும், அப்பகுதி மக்கள், குடிநீருக்காக காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லும் சூழலில், தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் இப்பகுதி மக்களுக்கு, புற்றுநோய், சிறுநீரக பிரச்னை, தோல் நோய் போன்ற பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன.


புற்று நோய் பாதிப்பு: தமிழகத்தில் ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில், புற்றுநோய், கிட்னி பாதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறையும், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், அனுமதியற்ற சாயப்பட்டறைகளை அகற்றுவதும், சில நாட்களில், மீண்டும் அவை இயங்குவதும் தொடர்கதையாக அரங்கேறி வருகிறது. கடந்த, ஏழு ஆண்டுகளாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், முழுமையாக அகற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதனால், இப்பகுதியில், சாயப்பட்டறைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டணம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், காவிரியில் இருந்து குடிநீர் எடுக்கும், சில தென் மாவட்டங்கள் என, 12 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.இதற்கு காரணம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் மெத்தனப்போகு தான். 'தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், பள்ளிபாளையம் பகுதியில், தனியாக ஆய்வுப்படை அமைத்து, இத்தகைய சாயப்பட்டறைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும், அரசும், அதிகாரிகளும் செவி சாய்க்கவில்லை.


சாயப்பூங்கா? இதுகுறித்து, பள்ளிபாளையம் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதவன் கூறியதாவது: பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில், அனுமதி பெற்ற, பெறாத, 350 சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. விதிமீறி கழிவுநீரை ஆற்றில் நேரடியாக கலக்கின்றன. குறிப்பாக, காவிரிக் கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள பட்டறைகள், தொடர்ந்து கழிவுநீரை ஆற்றில் வெளியேற்றி வருகின்றன. இது குறித்து, தமிழக அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் பல முறை புகார் மனு அனுப்பியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. பைப் லைன் மூலம், 2 கி.மீ., தூரத்துக்கு எடுத்துச் சென்று ஆற்றில் கிழவு நீரை வெளியேற்றுகின்றனர். ஒட்டமெத்தை ஓடையில், தனியாக பிளாஸ்டிக் பைப் லைன் அமைத்து, கழிவுநீரை வெளியேற்றுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு நிரந்த தீர்வு, சாயப்பட்டறைகள் ஒருங்கிணைந்து, ஒதுக்குப்புறமான இடத்தில், சாயப்பூங்கா சுத்திரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


புகாரளித்தால் நடவடிக்கை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயலட்சுமி கூறியதாவது: குமாரபாளையத்தில், அலுவலகம் அமைத்து, ஓராண்டு முடிந்துள்ளது. இதுவரை, 250க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது, பறக்கும்படை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பைப் லைன் அமைத்து, கழிவுநீரை வெளியேற்றுவது குறித்து மக்கள் புகார் அளித்தால், நேரடியாக சென்று நடவடிக்கை எடுக்கப்படும். சாயப்பட்டறைகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


பொது சுத்திகரிப்பு நிலையம் அமையுமா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2014 ஜூலையில், சட்டசபையில், 110 விதியின் கீழ், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். அதில், நாமக்கல் மாவட்டத்துக்கு, 200 கோடி ரூபாய். அதற்காக, சின்னாகவுண்டம்பாளையம், வெப்படை, எலந்தகுட்டை, பல்லக்காபாளையம் உள்ளிட்ட இடங்களில் அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், சாயப்பட்டறை உரிமையாளர்கள் இடம் வழங்க எவ்வித ஒத்துழைப்பும் வழங்காததால், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.


- நமது சிறப்பு நிருபர் -


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X