| வக்கீலை கைது செய்து போலீசார் தாக்கியதாக புகார்: ஆத்தூர் டி.எஸ்.பி., மீது வழக்குப்பதிய கோர்ட் உத்தரவு Dinamalar
வக்கீலை கைது செய்து போலீசார் தாக்கியதாக புகார்: ஆத்தூர் டி.எஸ்.பி., மீது வழக்குப்பதிய கோர்ட் உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
12:07

ஆத்தூர்: வக்கீலை கைது செய்து, போலீசார் தாக்கியதாக அளித்த புகாரில், டி.எஸ்.பி., உள்பட நான்கு பேர் மீது, வழக்குப்பதிய, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடியைச் சேர்ந்தவர் சுரேஷ், 35; வக்கீலான இவர், 2017 டிச., 12ல், சென்னை, ஆர்.கே., நகர் இடைத்தேர்தல் தொடர்பாக, ஆத்தூர் எம்.எல்.ஏ., அலுவலகம் முன், போராட்டம் நடத்தினார். அ.தி.மு.க., நகர அவைத்தலைவர் கலியன் கொடுத்த புகாரின் படி, சுரே?ஷ வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், ஆத்தூர் போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதுதவிர, கடந்த ஜூன், 5ல், டி.எஸ்.பி., அலுவலகத்துக்கு சென்ற சுரேஷ், தகராறில் ஈடுபட்டதாக, டவுன் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து, நவ., 30ல், ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், சுரேஷ் மனு அளித்தார். அதில், 'பொய் புகாரில், இருமுறை போலீசார், என்னை கைது செய்தனர். டி.எஸ்.பி., பொன் கார்த்திக்குமார் உத்தரவுப்படி, எஸ்.ஐ., அமிர்தலிங்கம், ஏட்டுகள் செல்வராஜ், செந்தில் ஆகியோர் தாக்கியதில், ரத்தக்காயம் ஏற்பட்டது. ஜூன், 9ல், சேலம் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகாரளித்தும் நடவடிக்கையில்லை' என, கூறப்பட்டுள்ளது.நேற்று, மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சிவக்குமார், 'உத்தரவு கிடைக்கப்பெற்ற, 24 மணி நேரத்தில், டி.எஸ்.பி., - எஸ்.ஐ., - ஏட்டுகள் ஆகியோர் மீது, ஆத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிந்து, இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X