| விபத்தில் உயிரிழந்த டாக்டரின் உடலை பெற 3 மனைவிகளின் குடும்பத்தினர் போட்டாபோட்டி Dinamalar
விபத்தில் உயிரிழந்த டாக்டரின் உடலை பெற 3 மனைவிகளின் குடும்பத்தினர் போட்டாபோட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
12:07

சேலம்: சாலை விபத்தில் உயிரிழந்த டாக்டரின் உடலை பெற, மூன்று மனைவிகளின் குடும்பத்தினர் போட்டிபோட்டதால், அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.


சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே, மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன், 64; டாக்டரான இவர், அதே பகுதியில், மருத்துவமனை நடத்திவந்தார். இவரது முதல் மனைவி திலகவதி இறந்துவிட்டார். இவர்களது மகன் அருண், ஆத்தூரில் வசிக்கிறார். முருகனின், இரண்டாவது மனைவி உமா, அயோத்தியாப்பட்டணத்தில் வசிக்கிறார். மூன்றாவது மனைவி சந்திராவுடன், முருகன் வசித்துவந்தார். கடந்த, 3ல், நாமக்கல் - திருச்சி சாலையில் நடந்த விபத்தில், முருகன் படுகாயமடைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு, சேலம், அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு வரப்பட்டது. நேற்று, சோதனை முடிந்த நிலையில், சடலத்தை தங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என, மூத்த மனைவி திலகவதியின் மகன் அருண், இரண்டாவது மனைவி உமா, மூன்றாவது மனைவி சந்திரா ஆகியோர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உமா, திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் சமாதானப்படுத்தி, அருண் குடும்பத்திடம், உடலை ஒப்படைத்தனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X