முடிவுக்கு வருகிறது 'அனலாக்' ஒளிபரப்பு: வரும் 15க்குள் கேபிள் நிலுவை தொகை செலுத்த உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
12:08

கேபிள் 'டிவி'யில், 'அனலாக்' ஒளிபரப்பு செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. வரும் ஜனவரி முதல், டிஜிட்டல் ஒளிபரப்பு செய்ய உள்ளதால், வரும், 15க்குள் ஆப்ரேட்டர்கள் நிலுவை மற்றும் சந்தா தொகை செலுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் அரசு கேபிள் கார்ப்பரேஷன் மூலம், 'டிஜிட்டல்' முறையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இருப்பினும் பல இடங்களில் அரசின் செட்டாப் பாக்சை பெறாமல், 'அனலாக்' முறையில் உள்ளூர் சேனல்களை ஒளிபரப்பி வருகின்றனர். இதனால், கேபிள் ஆப்ரேட்டர்களிடம் உள்ள இணைப்புகள் எண்ணிக்கை, கேபிள் கார்ப்பரேஷனுக்கு தெரிவதில்லை. பல ஆயிரம் இணைப்புகளை வைத்துக் கொண்டு, குறைந்த எண்ணிக்கையில் கணக்கு காட்டுவதாக கேபிள் கார்ப்பரேஷனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.இதை தொடர்ந்து அனைத்து தனியார், உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களும், 'அனலாக்' முறை ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், வரும் 15க்குள் நிலுவை மற்றும் சந்தா தொகை செலுத்த வேண்டும் என, நேற்று, கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், சேலம் தனி தாசில்தார் பாலாஜி கூறியதாவது: இந்திய தொலை தொடர்பு நெறிமுறை ஆணையம் (டிராய்), அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்வதை தடை செய்துள்ளது. வரும், 2019 ஜனவரி முதல், புதிய கட்டண முறையில் டிஜிட்டல் மூலம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. அரசு கேபிள் நிறுவனத்தில் பதிவு செய்துள்ள ஆப்ரேட்டர்கள், அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்தால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், 3.83 லட்சம் கேபிள் இணைப்புகள் இருந்தன. அதில், 1,300 அரசு கேபிள் ஆப்ரேட்டர்கள் மூலமாக, 3.75 லட்சம் இணைப்புகளுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல், புதிய கட்டண முறையில் ஒளிபரப்பு சேவை துவங்குவதால், இம்மாதம், 15க்குள், மாத சந்தா தொகை, 2.71 கோடி ரூபாயை, ஆப்ரேட்டர்கள் செலுத்த வேண்டும். 'அனலாக்' முறையில் ஒளிபரப்பு செய்ததில் உள்ள நிலுவை தொகை, எட்டு கோடி ரூபாய் வசூல் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X