எள்ளுக்கு தட்டுப்பாடு எதிரொலி: நல்லெண்ணெய் விலை கிடுகிடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
12:08

சேலம்: எள்ளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால், நல்லெண்ணெய் விலை, ஒரே மாதத்தில், லிட்டருக்கு, 75 ரூபாய் உயர்ந்துள்ளது.


தமிழகத்தின் எள் தேவையை, மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்கள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள், 80 சதவீதம் பூர்த்தி செய்கின்றன. தமிழகத்தில், எள் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லாத நிலையில், வெளிமாநில வரத்தும் சரிந்ததால், தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், இரு மாதங்களில், எள் விலை, கிலோவுக்கு, 50 ரூபாய் வரை, உயர்ந்துள்ளது. அதன் எதிரொலியாக, எள்ளை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெய் விலை, ஒரே மாதத்தில், லிட்டருக்கு, 75 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த அக்., 31ல், பிரபல நிறுவன தயாரிப்பு நல்லெண்ணெய் லிட்டர், 240க்கு விற்றது, நேற்று, 315 ரூபாய்; உள்ளூர் தயாரிப்பு முதல் ரகம் லிட்டர், 180க்கு விற்றது, 280 ரூபாய்; இரண்டாம் ரகம், 160க்கு விற்றது, 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து, சேலம் மாவட்ட தாவர எண்ணெய் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் சந்திரகாசன் கூறுகையில், ''ஜனவரியில், அறுவடை தொடங்கி, பிப்ரவரி இறுதியில், புதிய எள் விற்பனைக்கு வந்தால், மார்ச்சில், நல்லெண்ணெய் விலை சரிய வாய்ப்புள்ளது. அதுவரை, எண்ணெய் விலை உயரவே செய்யும்,'' என்றார்.


எகிறியது மரச்செக்கு எண்ணெய் விலை: மார்க்கெட்டில், பிரபல தயாரிப்பு நிறுவனம், உள்ளூர் எண்ணெய்களின் விலையை விட, மரச் செக்கில் தயாராகும் எண்ணெய் விலை, லிட்டருக்கு, 80 முதல், 120 ரூபாய் வரை, கூடுதல் விலைக்கு விற்கப்படும். தற்போது, பிரபல தயாரிப்பு நல்லெண்ணெய் லிட்டர், 315 ரூபாயை தொட்டுள்ள நிலையில், மரச்செக்கு தயாரிப்பு நல்லெண்ணெய் லிட்டர், 400 முதல், 500 ரூபாய் வரை, ஏரியாவுக்கு தகுந்தபடி விலை உயர்த்தப்பட்டுள்ளது.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X