மா அறுவடைக்குப்பின் தொழில்நுட்பம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2011
01:56

தர்மபுரி: மா முன்பருவ அறுவடை துவங்கியுள்ளதால் விவசாயிகள் போதிய தொழில்நுட்ப முறைகளை கடைபிடிக்குமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
வேளாண் அலுவலர் தாம்சன் வெளியிட்ட அறிக்கை: மாவில் முன்பருவ சீசன் துவங்கியுள்ளதால், விவசாயிகள் அறுவடைக்கு தயாராகி வருகின்றனர். அறுவடையின் போது மாங்காயின் காம்பு தளர்ச்சி அடைந்து இருக்க வேண்டும். மா தோலின் நிறம் கரும் பச்சையில் இருந்து லேசாக பச்சையாக மாறியும், சதைப்பற்று லேசாக மஞ்சள் நிறமாக மாறியிருக்கும் நிலையில் அறுடை பணிகள் துவக்கப்பட வேண்டும். அறுவடை செய்த மாவை தரம் பிரித்து பிளாஸ்டிக் கிரேட்களில் அடுக்கி சந்தைக்கு எடுத்து செல்ல வேண்டும். விற்பனைக்கு ஏற்ப பழம் பழுக்க வைக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்த வேண்டும்.


மா அறுவடை நேர்த்திகள்: மாவின் காம்பை 10 முதல் 20 செ.மீ., தூரம் விட்டு மா அறுவடை செய்யும் கருவி மூலம் அறுவடை செய்ய வேண்டும். இந்த முறையால் மாவின் பால் மா பழத்தோலின் மீது விழாமல் பாதுகாக்கப்படும். பால் தோலில் பட்டால் அந்த பகுதியில் கரும்புள்ளிகள் விழுந்து பழம் கெட்டு விடும். மா பழங்களை அறுவடை செய்யும் போது பழங்கள் கீழே விழுந்து காயம் அடையாமல் இருக்க வலையுடன் கூடிய அறுவடை கருவிகள் மூலம் அறுவடை செய்ய வேண்டும். மா பழங்களை அறுவடை செய்தவுடன் நேரடியாக சூரிய ஒளியில் படும்படி வைப்பதை தவிர்த்து, குளிர்ச்சியான இடங்களில் வைக்க வேண்டும்.
சாக்கு பை, கூடைகள் ஆகியவற்றில் மாம்பழங்களை வைக்க கூடாது. இதனால், பழங்கள் காயம் அடைய வாய்ப்பு உண்டு. பிளாஸ்டிக் கிரேட்சில் பழங்களை சேகரிக்க வேண்டும். காலை நேரத்தில் மா பழங்களை அறுவடை செய்து நிழல் பகுதியில் சேகரிக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட பேக்கிங் முறைகளை கையாண்டு ஒரே வரிசையில் ஒரே தரத்தில் பழங்களை காட்டன் அட்டை பெட்டிகளில் அடைக்க வேண்டும்.


மா பழங்களை காம்புடன் அறுவடை செய்தவுடன் அதில் வடியும் பால் மா பழங்களின் மேல் படாமல் இருக்க காம்பு பகுதி கீழ் புறமாக இருக்கும்படி பிரத்தியோக வலை பின்னப்பட்ட பகுதியில் (மூங்கில் தட்டி) 10 நிமிடம் வைத்து இருக்க வேண்டும். இதனால், மா பால் பழங்களில் மீது படாமல் தவிர்ப்பதால் பழ அழுகளில் இருந்து கட்டுப்படுத்த முடியும். மா பழங்களை 40க்கு 30 சைஸ் 10 செ.மீ., அளவு கொண்ட காட்டன் அட்டை பெட்டிகளில் ஒரே தரம் உள்ளவையாக அடுக்க வேண்டும். இந்த தொழில்நுட்ப முறைகளை விவசாயிகள் கடைபிடிப்பதன் மூலம் பழங்கள் அழுகள் மற்றும் சேதங்களில் இருந்து பாதுகாப்பாகவும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும். பழங்களின் தரம் மற்றும் கவரும் விதத்தை பொருத்து மார்க்கெட்டில் சந்தை விலை நிர்ணயிக்கப்படுவதால் விவசாயிகளும் கூடுதல் லாபம் பெற முடியும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X