பொங்கல் பண்டிகையை முன்னிட்டு. டேக் டைவர்ஸன்!..  வாகன போக்குவரத்து மாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2019
00:34

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக, சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு, கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்துார் வழியே செல்வதை தவிர்த்து, மாற்றுப்பாதையில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பொங்கல் பண்டிகையை யொட்டி, கோயம்பேடு, எம்.ஜி.ஆர்., பஸ் நிலையம், தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில் நிலையம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் பேருந்து நிலையங்களில் இருந்து, வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பொதுமக்கள் வசதிக்காக, கோயம்பேடில், 26; தாம்பரம் சானிடோரியத்தில், இரண்டு; பூந்தமல்லி, மாதவரத்தில், தலா, ஒன்று என, 30 சிறப்பு முன்பதிவு மையங்கள், ஜன., 9 முதல், 14ம் தேதி வரை செயல்படும்.


ஜன., 11 முதல், 14ம் தேதி வரை, கோயம்பேடு பஸ் நிலையத்தில், அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான, தென் மாவட்ட பேருந்துகள், தாம்பரம், பெருங்களத்துார் செல்லாமல், மதுர வாயல், பூந்தமல்லி, நசரத்பேட்டை வெளிசுற்றுச்சாலை வழியே,

வண்டலுார் செல்லும்.


எனவே, தாம்பரம், பெருங்களத்துார் பஸ் நிலையங்களில் இருந்து, பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருக்கும் பயணியர், ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் சென்றடைந்து, அங்கிருந்து, பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள

வேண்டும்.


ஜன.,11 முதல், 14ம் தேதி வரை, கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்துார் வழியே செல்வதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக, திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதுார் - செங்கல்பட்டு வழியே சென்றால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல், பயணம் செய்யலாம்.


கனரக வாகனங்கள், ஜன.,11 முதல், 14 வரை, மதியம், 2:00 மணி முதல், அதிகாலை, 2:00 மணி வரை, மதுரவாயல் முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடங்களை தவிர்த்து, வழித்தட மாற்றம் செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு

உள்ளது.


இதனால், தாம்பரம், பெருங்களத்துார், வண்டலுார், ஊரப்பாக்கம் வரை, போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். தாம்பரம் ரயில் நிலையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து, திருவண்ணாமலை, திண்டிவனத்திற்கு, பேருந்துகள் இயக்கப்படும்.

பயணியர், www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகிய இணையதளங்கள் வழியே, முன்பதிவு செய்யலாம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
05-ஜன-201908:13:11 IST Report Abuse
Girija அதெல்லாம் ஒரு கும்பலும் அலை மோதாது எங்களுக்கு தான் கடவுள் நம்பிக்கை இல்லையே தீய சக்திகள் இந்து கடவுள்களை பழிப்பதை ரசிக்கும் என்ன பெரிய பண்டிகை? சும்மா பாஸ்க்கு ஊர் போறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X