வாசிப்பை நேசிப்பவர்கள் இணைந்து இயக்கம் உருவாக்கம்: பல்வேறு பணிகள் அரங்கேற்றம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

06 ஜன
2019
10:45
பதிவு செய்த நாள்
ஜன 06,2019 00:08


சென்னையில் வாசிப்பை நேசிக்கும் வாசகர்கள் இணைந்து, வாசிப்பு இயக்கங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர்.அதில், பழந்தமிழ் இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நவீன இலக்கியங்கள், சினிமா இலக்கியங்கள் என, ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு மாதிரியான இலக்கியங்களை வாசிப்பது, வாசிக்கத் துாண்டுவது, விமர்சிப்பது என, பல்வேறு பணிகளை செய்து வருகின்றன.இந்த அமைப்புகள், வாரம், மாதம் என்ற அளவில், கூட்டங்களை நடத்தி, இலக்கியம் குறித்த உரையாடல்களை முன்னெடுத்து வருகின்றன.பாரதிதாசனின் மாணவர்களுள் ஒருவரான, கவிஞர் பொன்னடியான் நடத்தும் கடற்கரை கவியரங்கம், பல்வேறு ஆண்டுகளாக, மெரினா கடற்கரையில் இன்றளவும் நடந்து வருகிறது. இதில், ஏராளமான கவிஞர்கள் பங்கேற்று, கவிதையை வாசித்து வருகின்றனர். ஏர்வாடி ராதாகிருஷ்ணனின் கவிதை உறவு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், அதே போல் கவிதை வாசிப்பு குறித்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வாசகர் வட்டம், வாசக சாலை, பரிசல், இலக்கிய வட்டம் உள்ளிட்டவை, பேச்சு, எழுத்தை போற்றி வருகின்றன. இன்னும், ஏராளமான அமைப்புகள் சென்னையில் இயங்கி வருகின்றன. வாசிப்பை சுவாசமென நேசித்து வரும் இது போன்ற அமைப்புகள், வாசிப்பை நீர்த்துப் போகச் செய்யாமல் இன்றளவும் உயிர்ப்புடன் வைத்துள்ளன.இந்த அமைப்புகளில் மூத்த எழுத்தாளர்கள் முதல் இளம் எழுத்தாளர்கள் வரை பங்கேற்று, இலக்கியம் குறித்த தங்களின் கருத்துகளை பதிவு செய்வதால், வாசகர்களுக்கும், இளம் படைப்பாளிகளுக்கும் உத்வேகம் பெற்று வருகின்றனர் எனில் மிகையல்ல.சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்குவோர், தங்களின் இலக்கிய திறமைகளை, இந்த அமைப்புகளுடன் உறவு கொண்டு, அவர்கள் ஏற்படுத்தி தரும் கூட்டம் மற்றும் மேடைகளில் வெளிப்படுத்தலாம்.


- நமது நிருபர் -

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
06-ஜன-201916:58:11 IST Report Abuse
Bhaskaran மாணவர்களிடம் நூல்வாசிக்கும் பழக்கத்தை அந்தக்காலத்தில் நீதிபோதனைவகுப்புகள் மூலம் ஏற்படுத்துவார்கள் தற்போது பள்ளிகளில் அதெல்லாம் செய்கின்றார்களோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X