புத்துயிர்!வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு... பழமையான கட்டடத்தை புனரமைத்த மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஜன
2019
00:28

நமது நிருபர் --

புராதன கட்டடத்தில் இயங்கி வந்த வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தை, 25 லட்ச ரூபாய் செலவில், பொதுமக்கள் புனரமைத்து கொடுத்துஉள்ளனர்.சென்னை, வண்ணாரப்பேட்டை காவல் நிலையம், 121 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 1898- டிச., 31ம் தேதி, அப்போதைய, மெட்ராஸ் போலீஸ் கமிஷனர் அகர் பட்லி அகர், இக்கட்டடத்தை திறந்து வைத்தார்.அப்போது, வண்ணாரப்பேட்டை பகுதிகளில், சென்னை துறைமுகம், ஸ்டான்லி மருத்துவமனை, 'கரீம், தாஜ்மகால், பவிதா' போன்ற பீடி கம்பெனிகள் இருந்தன. இப்பகுதியில் குற்றச்செயல்கள் நடப்பதை தடுக்க, இந்த காவல் நிலையம் துவங்கப்பட்டது.பல வரலாற்று வழக்குகளை உள்ளடக்கிய இக்காவல் நிலையம், சிதிலமடைந்து, புதர்கள் மண்டி மோசமாக காட்சியளித்தது.இக்காவல் நிலையத்தை பார்வையிட்ட, தற்போதைய, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், கட்டடத்தை உடனடியாக புனரமைக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, தனியார் நிறுவனம் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியுடன், 25 லட்ச ரூபாய் செலவில், ஆறு மாத காலத்தில், இந்த காவல் நிலையம் சீரமைக்கப்பட்டது.வண்ணாரப்பேட்டையில் உள்ள துணிக்கடை நிறுவனங்கள், காவல் நிலையத்திற்கு வேண்டிய மேஜை, நாற்காலிகளை வழங்கினர். தனியார் பெயின்ட் கம்பெனி நிறுவனத்தினர், கட்டடத்தின் முழு சுண்ணாம்பு பூச்சு வேலையை செய்து கொடுத்தனர்.மேலும், தனியார் நிறுவனம் சார்பில், காவல் நிலையத்திற்கு, இரு கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டன.மேலும், காவல் நிலையத்தை சுற்றி, புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே, வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம், மணிக்கூடு கட்டடம் உள்ளிட்ட படங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் பீட்டர் ஜவகர் கூறியதாவது:சமீபத்தில், இந்தியா முழுவதும், புராதன கட்டடத்தில் செயல்படும், சிறந்த காவல் நிலையத்திற்கு, விருதுகள் வழங்கப்பட்டன.அதில், தமிழகத்தில் இருந்து பெரியகுளம், கன்னியாகுமரி மற்றும் சென்னையில் இருந்து வண்ணாரப்பேட்டை, வடபழனி காவல் நிலையங்கள் போட்டியின. இதற்காக, தன்னார்வலர்களின் உதவியுடன், வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசார் பயன்பெறும் வகையில், காவல் நிலையம் உள்ளே, உடற்பயிற்சி அமைக்கும் பணி நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-ஜன-201909:10:36 IST Report Abuse
Srinivasan Kannaiya நமக்கு நாமே என்று விட்டால் மக்களே செயது கொள்ளுவார்கள்.. அரசியல் வாதிகள் எல்லாம்நாட்டை விட்டே ஓடிவிட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X