ஞாபகம் இருக்கிறதா/ ஹீராராம் கொலை வழக்கு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2019
00:21

-- நமது நிருபர் -

-நான்கு ஆண்டுகளுக்கு முன், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்த, அடகு கடை வியாபாரி, ஹீராராம் கொலை வழக்கில், இன்று வரை, குற்றவாளிகளின் நிழலைக் கூட, போலீசார் கண்டுபிடிக்கவில்லை.கடந்த, 2014, அக்., 22ம் தேதி, தீபாவளி பண்டிகையில், சென்னையின் தெருவெங்கும் பட்டாசு சத்தமும், புகையுமாக இருந்தது.இரவில், தெருக்களில் ஆட்கள் நடமாட்டமும் மிக குறைவாகவே இருந்தது. ஆனால், வெடி சத்தம் மட்டும், ஆங்காங்கே கேட்டுக்கொண்டிருந்தது. அந்த சத்தத்தில், ஒருவர் உயிர் போகும் வலியில் கத்தியது, யார் காதிலும் விழவில்லை.தீபாவளி என்பதால், பெரும்பாலான கடைகள் அன்று மூடப்பட்டிருந்தன. வடமாநிலத்தைச் சேர்ந்த ஹீராராம், 55, வழக்கம் போல், விருகம்பாக்கம், வேம்புலியம்மன் கோவில் தெருவில் உள்ள, தன் அடகு கடையை திறந்திருந்தார்.இரவு, 8:00 மணிக்கு, கடைக்கு வந்த, மூவர், நகை அடகு வைக்க வேண்டும் என, கூறினர். நகையை வாங்கிய பின், லாக்கர் கதவை திறந்த ஹீராராமை, அந்த மர்ம கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்ததும், கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து, அந்த கும்பல் தப்பியது.தந்தை, வீட்டிற்கு வராததால், ஹீராராமின் மகன், ஆனந்த், கடைக்கு சென்று பார்த்தார். அப்போது, ரத்த வெள்ளத்தில் கிடந்த, அவரது தந்தையை மீட்டு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும், கே.கே.நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் முழுமையாக ஆய்வு செய்தனர். கடையில், கண்காணிப்பு கேமரா இல்லாததாலும், பக்கத்து கடைகளுக்கு விடுமுறை என்பதாலும், இக்கொடூரத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை.இந்நிலையில், அடுத்த நாள் காலை, 5:00 மணிக்கு, சுயநினைவுக்கு வந்த ஹீராராம், தன்னை தாக்கியது, மூன்று பேர் கொண்ட கும்பல் எனத் தெரிவித்து, சிறிது நேரத்தில் இறந்து போனார்.இச்சம்பவம் நடந்தேறி, நான்கு ஆண்டுகளாகியும், கொலை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.இன்னும் சொல்லப்போனால், இந்த வழக்கு குறித்த நினைவுகள் போலீசாருக்கு இருக்கிறதா என்பது கூட சந்தேகம் தான்.ஹீராராம் மகன், ஆனந்த் கூறியதாவது:விருகம்பாக்கம், வன்னியர் தெருவில், 1.5 ஆண்டுகளாக, அடகு கடை நடத்தி வந்தோம். பின், விருகம்பாக்கம், வேம்புலியம்மன் கோவில் அருகே கடையை மாற்றினோம்.அன்று கடை ஊழியர்கள், தீபாவளி விடுமுறைக்காக, சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால், அப்பா மட்டும், தனியாக இருந்தார். அப்போது தான், அந்த கொடூர சம்பவம் நடந்தது.சில ஆண்டுகளில், போலீசார், இந்த செய்தியை மறந்து விட்டனர். ஆனால், அச்சம்பவம், எங்கள் மனதில், நீங்கா வடுவாக இருக்கிறது.அந்த கும்பல், எங்கள் கடையில் இருந்து, 6 கிலோ தங்க நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த, அப்பாவின் கையில், அரை கிராம் குழந்தை மோதிரம் ஒன்றும், அதை அடகு வைத்த ரசீதும், ரத்தக்கறையுடன் வீசப்பட்டு கிடந்தது.வளசரவாக்கம் அருகில் உள்ள, ஆழ்வார் திருநகர் லட்சுமி நகரைச் சேர்ந்த ரவி என்பவர், அடகு வைத்த நகை. அதை லாக்கரில் இருந்து எடுக்கும் போது தான், என் தந்தையை வெட்டியிருக்க வேண்டும்.போலீஸ் விசாரணையில், அந்த ரசீதில் இருந்த முகவரியும் பொய்யானது என, தெரியவந்தது. என் தந்தை கொலை செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரையில், கொலையாளிகள் குறித்த எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.கடையில் இருந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதால், பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வந்த தொழிலை, செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். அவ்வப்போது, காவல் நிலையத்திற்கும் அலைந்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த கொலை வழக்கில், ஒரு சின்ன துப்பு கூட கிடைக்கவில்லை என்பது, போலீசாருக்கு பெருமை சேர்க்கும் விஷயம் இல்லை.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X