| உதவுமா? குடிநீர் தேவைக்கு கல்குவாரி குட்டைகள்...ஆய்வு துவங்கியது பல்லாவரம் நகராட்சி Dinamalar
உதவுமா? குடிநீர் தேவைக்கு கல்குவாரி குட்டைகள்...ஆய்வு துவங்கியது பல்லாவரம் நகராட்சி
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

09 ஜன
2019
01:12
பதிவு செய்த நாள்
ஜன 09,2019 00:23

 - நமது நிருபர் -

பல்லாவரம் நகராட்சியின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியாக, கல்குவாரி குட்டைகளில் உள்ள நீரை பயன்படுத்த, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, குட்டை நீரின் தன்மையை ஆய்வு செய்யும் பணி துவங்கி உள்ளது.சென்னை மாநகராட்சியை ஒட்டி, பல்லாவரம் நகராட்சி உள்ளது. 42 வார்டுகளை உடைய இந்நகராட்சியில், பாலாறு மற்றும் மெட்ரோ வாட்டர் மூலம், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.தட்டுப்பாடுபாலாறு திட்டத்தின் மூலம், நாள் ஒன்றுக்கு, 40 லட்சம் லிட்டர்; மெட்ரோ வாட்டர் மூலம், 10 - 12 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. இதை, கீழ்நிலை மற்றும் மேல்நிலை தொட்டிகளில் நிரப்பி, வாரத்திற்கு ஒரு முறை வினியோகிக்கின்றனர்.கோடை காலத்தில், இந்த அளவு குறைந்து விடுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் சிரமப்படுகின்றனர். அதுபோன்ற நேரத்தில், நகராட்சி மூலம், லாரி தண்ணீர் வினியோகித்தாலும், போதுமானதாக இல்லை.இப்பிரச்னையை கருத்தில் கொண்டு, செம்பரம்பாக்கம் குடிநீர் திட்டத்திற்கான பணிகள், துரிதமாக நடந்து வருகின்றன.இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால், நாள் ஒன்றுக்கு, 29 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இதற்கிடையில், பம்மல் - அனகாபுத்துாரை போல், கல்குவாரி குட்டை தண்ணீரை, குடிநீராக பயன்படுத்துவது குறித்து, பல்லாவரம் நகராட்சியில், அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.ஜமீன் பல்லாவரம், கச்சேரி மலை குட்டை, பழைய பல்லாவரம், திருநீர்மலை, திரிசூலம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குட்டைகளை, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர், பிரகாஷ் சமீபத்தில் ஆய்வு செய்தார்.ஓரளவு தீர்வுஇந்த கல்குட்டைகளின் ஆழம், தண்ணீரின் தன்மை, குடிநீருக்கு ஏற்றதா ஆகியவை குறித்து, ஆய்வு செய்ய அவர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதற்கான ஆய்வு பணியை, அதிகாரிகள் துவங்கி உள்ளனர். கல்குவாரி நீரை சுத்திகரித்து வினியோகித்தால், பல்லாவரம் நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு, ஓரளவு தீர்வு கிடைக்கும்.ஒருங்கிணைந்து செயல்படுத்தலாம்!தாம்பரம் கடப்பேரி, திருநீர்மலை, திரிசூலம், பல்லாவரத்தில், 10க்கும் மேற்பட்ட கல்குவாரி குட்டைகள் உள்ளன. இவை, ஒவ்வொன்றும், 100 - 150 அடி ஆழம் கொண்டவை. பல ஆண்டுகளாக, இந்த குட்டைகள், துணி துவைக்கவும், குளிப்பதற்கும் மட்டுமே பயன்படுகிறது. கோடை காலத்தில், இவற்றில் குளிக்கும் மாணவர்கள், தண்ணீரில் மூழ்கி இறப்பது, ஆண்டுதோறும் நடக்கிறது. இந்த குட்டைகளை ஒருங்கிணைத்து, தண்ணீரை சுத்திகரித்து, குடிநீராக பயன்படுத்தலாம். இதன்மூலம், புறநகர் நகராட்சிகளுக்கு, கோடை காலத்தில் போதிய குடிநீர் கிடைக்கும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X