தீவிரம் * வரிவசூலிக்க நோட்டீஸ் கொடுப்பதில் மாநகராட்சி * வரிவிதிப்பு குளறுபடிகளில் தீர்வு காணாததால் சிக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2019
02:52


மதுரை, மதுரையில் சொத்துவரி விதிப்புகளில் உள்ள குளறுபடிகளால் வரி செலுத்தாமல் உள்ள சொத்துக்களின் உரிமையாளர்களின் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்காமல் வரிவிதிப்பு சீராய்வு பணிகளை துவக்கியுள்ளது. நோட்டீஸ் கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.குடியிருப்பு கட்டடங்கள் வணிக கட்டடங்களாவும், வணிக கட்டடங்கள் குடியிருப்பு கட்டடங்களாகவும், கீழ்தளத்திற்கு ஒருவிதமான வரி, மேல்தளத்திற்கு இன்னொரு வகையான வரி என பல்வேறு வித வரிவிதிப்பு குழப்பங்களால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வரிவிதிப்புகளில் சிக்கல் நீடிக்கிறது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. ஒவ்வொரு குறைதீர்ப்பு கூட்டங்களில் இந்த சொத்துக்களின் வரிவிதிப்பில் உள்ள குறைகள் தொடர்பாக மனுதாரர்கள் மனு அளிக்கின்றனர். 'நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற பதில் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கிறது. சிக்கல்களுக்கு தீர்வுகள் கிடைக்காததால் இவர்கள் எந்த வரியும் செலுத்தாமல் உள்ளனர்.மாநில அரசு சமீபத்தில் அறிவித்துள்ள குடியிருப்புக்கு 50 சதவீதம், வணிக கட்டடங்களுக்கு 100 சதவீதம் வரிவிதிப்புகள் வரும் மார்ச் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதனால் நிலுவையில் உள்ள அனைத்து வரிகளையும் வசூலிக்க மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. வீடுவீடாக வரி செலுத்த நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர்.நகரில் 3.20 லட்சம் பேருக்கு வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த ஆண்டு 68,000 வரிவிதிப்புகளுக்கு கூடுதல் வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளன. தவிர மீதமுள்ள அனைவருக்கும் மார்ச் முதல் கூடுதல் வரிவசூல் செய்யப்படும். இதற்கான பணிகளை மாநகராட்சி துவக்கியுள்ளது. ஆனால் வரிவிதிப்பில் உள்ள குழப்பங்களுக்கு தீர்வு காணாமல் இப்பணிகளை துவக்கியுள்ளதால் சிக்கல்களுக்கு தீர்வு கிடைப்பதில் இன்னும் சிக்கல்களே நீடிக்கிறது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X