தமிழக அரசு மீது தேசிய பசுமை தீர்ப்பாயம்... அதிருப்தி! :நீர்நிலைகளை தூர்வாரியதில் திருப்தியில்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2019
00:16

சென்னை:சென்னையில், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்நிலைப் பகுதிகளை, துார்வாருவது குறித்த செயல் திட்ட அறிக்கையை, ஒரு மாத காலத்திற்குள் தாக்கல் செய்ய,தமிழக அரசுக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை, கூவம் ஆற்றில், கழிவுநீர் கலப்பதை தடுப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றவது, ஆற்றை சீரமைப்பது குறித்து, 2013ல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின், தென்மண்டல அமர்வு, வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தது.இந்த விசாரணையின் போது, அடையாறு ஆறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் துார்வார வேண்டும் என, எட்வின் வில்சன் மற்றும் ஜவகர்லால் சண்முகம் ஆகியோர், தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.


இதற்கிடையே, தென்மண்டல அமர்வில், நீதிபதிகள் இல்லாததால், வழக்கு, டில்லியில் உள்ள, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் நாகின் நந்தா ஆகியோர் முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கூவம், அடையாறு ஆற்றின் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிகள், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள், 2013ல் துவங்கி நடைபெற்று வருகிறது.


இந்த பணிகள், இதுவரை முழுமையடையவில்லை. இதனால், அரசின் செயல்பாடு திருப்தி அளிக்க கூடியதாக இல்லை.எனவே, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர் நிலைகளில், கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்தும், ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்தும், மறு சீரமைப்பு பணிகள் குறித்தும், விரிவான செயல் திட்ட அறிக்கையை, தமிழக அரசு, ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும்.இல்லையென்றால், நீர்நிலைகளில் மாசுவை தடுக்க, 10 கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்த நேரிடும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.வழக்கு விசாரணை, பிப்., 13க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
12-ஜன-201922:04:24 IST Report Abuse
rajan.  வேறென்ன இங்கேயும் எதோ வேலை பார்த்த மாதிரி கணக்கு எழுதி ஆட்டைய போட்டு தள்ளி இருப்பானுங்க. வழக்கம் போல.
Rate this:
Share this comment
Cancel
Rajasekar - Trivandrum,இந்தியா
12-ஜன-201919:02:18 IST Report Abuse
Rajasekar பசுமை தீர்ப்பாயம் தான் இருப்பதாக காட்டிக்கொள்வதற்காக செய்யும் நாடகம் 6 ஆண்டுகள் இல்லாத அக்கறை இப்போது ஏன்??? ஸ்டெர்லைட் ஆலைத்திறப்பதில் தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்காததால் பசுமைதீர்பாயம் தமிழக அரசை கேள்விகேட்கிறது இது ஒருவகையில் மக்களுக்கு நல்லதுதான்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஜன-201915:18:06 IST Report Abuse
Bhaskaran விட்டால் அந்த இரண்டு ஆறுகளையும் மூடி அதன்மேல் கடைகள் கட்டிவிடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X