போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2019
02:21

வீட்டில் 30 சவரன் திருட்டு


பெரவள்ளூரைச் சேர்ந்தவர், பாண்டியன், 60; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். அவரது மனைவி பத்மா, 55. இருவரும், நேற்று முன்தினம் இரவு, கீழ்தள வீட்டை பூட்டி, முதல்மாடியில் துாங்கி உள்ளனர். நேற்று காலை எழுந்த போது, கீழ்தளத்தில் இருந்த பீரோவிலிருந்து, 30 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. பெரவள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


ஐந்து இளம் பெண்கள் மீட்பு


வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலையில் உள்ள, 'மசாஜ் சென்டர்' ஒன்றில், பாலியல் தொழில் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, அங்கு ஆய்வு செய்த போலீசார், ஜெயந்தி, 42, என்பவளை கைது செய்தனர். அவளிடம் இருந்து, வட மாநிலத்தைச் சேர்ந்த, ஐந்து இளம் பெண்களை மீட்ட போலீசார், அவர்களை, மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


திருட்டில் ஈடுபட்டவன் கைது


மயிலாப்பூர் பகுதிகளில், முதியவரை குறி வைத்து, நுாதன முறையில் திருட்டு சம்பவங்கள், தொடர்ந்து நடந்து வந்தன.தனிப்படை போலீசார் விசாரணையில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவா, 38, என்பவன், திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. மயிலாப்பூர் போலீசார், நேற்று காலை, அவனை கைது செய்து, 1 லட்சம் ரூபாய் மற்றும் மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


'வீடியோ கால்' பேசி சிக்கிய திருடன்


கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், வெள்ளையப்பன், 29; மெரினாவில், ஜெ., நினைவிட கட்டுமான பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, சக ஊழியர்களுடன், அங்குள்ள தற்காலிக குடிலில் துாங்கி உள்ளார்.நள்ளிரவில் குடிலுக்குள் புகுந்த மர்மநபர், நான்கு, மொபைல் போன்களை திருடிச் சென்றான். வெள்ளையப்பன் உள்ளிட்டோர், திருடு போன மொபைல் போனுக்கு, 'வீடியோ கால்' பேசியுள்ளனர். அப்போது, அதே பகுதியில் உள்ள, அவன் இருப்பிடத்தை அறிந்து, அவனை பிடித்து, அண்ணா சதுக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், நல்லிவீரன், 28, என்பவனை கைது செய்து, ஆறு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


பெண்ணிடம் 3 சவரன் பறிப்பு


திருநின்றவூரைச் சேர்ந்தவர், மேனகா, 53. நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் உள்ள, அவரது தங்கையை பார்த்த பின், வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், மேனகாவின், 3 சவரன் செயினை பறித்து தப்பினர்.திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


காரை எரித்த ஓட்டுனர் சிக்கினான்


தஞ்சாவூரைச் சேர்ந்தவன், மாதரசன், 27; 'கால் டாக்சி' ஓட்டுனர். அவன், 9ம் தேதி இரவு, மது போதையில், வடபழனி, 100 அடி சாலையில், கார் ஓட்டிச் சென்றான்.அங்கு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், காரை பறிமுதல் செய்து, வடபழனி மெட்ரோ ரயில் மேம்பாலத்திற்கு, கீழே நிறுத்தி வைத்தனர். அந்த கார், நேற்று முன்தினம் அதிகாலை, திடீரென தீப்பற்றி எரிந்தது.


போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மாதரசன், மது குடித்து, வாகனம் ஓட்டி, போலீசாரிடம் சிக்கிய சம்பவம், அவனது முதலாளிக்கு தெரியக் கூடாது என்பதற்காக, காரை தீயிட்டு கொளுத்தியது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார், அவனை, நேற்று காலை கைது செய்தனர். மேலும், காரில் இருந்த, முக்கிய பொருட்களை எரிப்பதற்காக, தீ வைக்கப்பட்டதா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X