கடன் தொல்லை: குடும்பமே தற்கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2019
02:28

புழல்:கடன் தொல்லையால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.புழல் அடுத்த புத்தகரம், திருமால் நகர், 5வது தெருவைச் சேர்ந்தவர், சமில் அகமது, 40; அதே பகுதியில், மொபைல் போன் கடை வைத்திருந்தார். அவரது மனைவி தபு, 35; மகள் ஜெபின் தாஜ், 6.


சமில் அகமது, அவரது குடும்பத்தினர், நேற்று காலை நீண்ட நேரமாகியும், வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.சந்தேகமடைந்த, அவர்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சந்திரிகா என்பவர், 4:30 மணிக்கு, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். அப்போது, சமில் அகமது, அவரது மனைவி மற்றும் மகள், துாக்கிட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.


இதைப்பார்த்து அலறிய சந்திரிகா, புழல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார், மூன்று சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மொபைல் போன் கடை நடத்து வதற்காக, சமில் அகமது பல இடங்களில் கடன் வாங்கியதும், போதிய வருமானம் இல்லாததால், கடனை கட்ட முடியாமல் இருந்ததும் தெரியவந்தது.


குடியிருக்கும் வீட்டிற்கு, இரண்டு மாதங்களாக வாடகை தராத நிலையில்,கடன் கொடுத்தவர் கள், பணத்தை திருப்பி கேட்டு நச்சரித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த சமில் அகமது, மனைவி, மகளுடன், நேற்று முன்தினம் இரவு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.புழல் போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜன-201911:47:39 IST Report Abuse
Auditor, Coimbatore Central Govt . should introduce new scheme for found black money in local lendings. Every indian should disclose their debts to govt to recognise true owners of money. Govt only can avlid this type of incidents by way of stringent norms for lending, borrowing, etc.
Rate this:
Share this comment
Cancel
12-ஜன-201911:44:32 IST Report Abuse
Nallavan, Madurai Suicide panra alavuku ethuku torture panranga? Money only life? Life is beyond money. Kindly avoid pressures for recover money matters. 6 years baby enna paavam pannuchu? Ipo kadan kuduthavanga enna seivanga panathuku?
Rate this:
Share this comment
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
12-ஜன-201910:06:37 IST Report Abuse
chennai sivakumar Very sad. This tr will continue due to the escalating cost of staff salaries,low margin,high rentals. The day is not far off where in all small traders will either quit the business due to loss or may go to such extreme step of suicidal. A small trader has put his entire family in the shop to manage and when I enquired he said with the low margin he cannot afford to employ from outside. The same shop guy had 5 to 6 attants some years ago.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X